21--26. மாசு இல் வால் ஒளி வடதிசைச்
சேடி - வடதிசையில் மாசற்ற வெள்ளிய வொளியினையுடைய விஞ்சையருலகில்,
காசு இல் காஞ்சனபுரக் கடிநகர் உள்ளேன் - குற்றமற்ற காஞ்சனபுர
மென்னுங் காவல் பொருந்திய நகரத்தில்உள்ள யான், விஞ்சையன்
தன்னொடு என் வெவ்வினை உருப்ப-எனது கொடுவினையானது தோற்ற என்
கணவனோடு, தென்றிசைப் பொதியில் காணிய வந்தேன்-தென்றிசையிலுள்ள
பொதியின் மலையின் வளங்காணும் பொருட்டு வந்தேன், கடுவரல் அருவிக்
கடும்புனல் கொழித்த - விரைந்த செலவினையுடைய அருவியினது வேகமுள்ள
நீர் தெள்ளிய, இடுமணல் கானியாற்று இயைந்தொருங்கு இருந்தேன்-
இடுமணலையுடைய கான்யாற்றில் என் கணவனுடன் கூடி ஒருங்கிருந்தேன் ;
|
சேடி - வித்தியாதர
ருலகு ; அது வெள்ளி மலையிலுள்ளதாகலின் வாலொளியையுடையதாயிற்று
; 1
''''வெள்ளி
மால்வரை வியன்பெருஞ் சேடி'''' என்பது காண்க. உருப்ப - அழலவென்றுமாம்.
காணிய : செய்யிய வென்னும் வினையெச்சம். வந்தேன் : எச்சமுற்றுமாம்.
இடு மணல் - எக்கர்.
|
27--32.புரிநூல் மார்பில்
திரிபுரி வார்சடை மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் - அப்பொழுது
முறுக்கிய பூணூலணிந்த மார்பும் திரித்து முறுக்கிய நீண்ட சடையும்
மரவுரி யாடையுமுடைய விருச்சிகன் என்னும் முனிவன், பெருங்குலைப் பெண்ணைக்
கருங்கனி அனையதோர் இருங்கனி நாவற்பழம் ஒன்று ஏந்தி - பெரிய
குலையையுடைய பனையினது கரிய கனியை யொத்ததாகிய பெருமை பொருந்திய
கனிந்த நாவற்பழம் ஒன்றைக் கையிலேந்தி வந்து, தேக்கிலை வைத்துச்
சேண் நாறு பரப்பில் பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன் - அதனை
ஒரு தேக்கின் இலையில் வைத்துவிட்டு நெடுந்தூரம் நாறுமியல்புடைய
பூக்கள் கமழும் பரப்பினையுடைய பொய்கையில் நீராடச் சென்றானாக
;
|
பனங்கனி பருமன்
பற்றி உவமையாயது. ஓர் : அசை. நாறு பூ எனவும், பரப்பிற் பொய்கை
யெனவும் இயையும்.
விருச்சிக னென்போன்
நாவற்பழமொன்றை ஏந்தி வைத்துப் பொய்கையாடச் சென்றானாக என்க.
|
33--34. தீவினை
உருத்தலின் செருக்கொடு சென்றேன் - தீவினையானது பயன் கொடுப்பத்
தோற்றுதலின் யான் ஆண்டுத் தருக்கொடு சென்று, காலால் அந்தக்
கருங்கனி சிதைத்தேன் - காலினாலே அந்த நாவற்பழத்தைச் சிதைத்தேன்
;
|
35--42. உண்டல் வேட்கையின்
வரூஉம் விருச்சிகன் - உண்ணும் வேட்கையுடன் நீராடிப் போந்த விருச்சிக
முனிவன், கண்டனன்
|
சிலப். 6 : 1.