கடிய நோயால் வருந்தலுற்றனை, வானூடு எழுக என - விசும்பின் மீது எழுவாயாக
என்று கூற ;
|
அலவலைச் செய்தி
- ஆராயாது செய்த செய்தி ; அலமருதலைச் செய்யும்செய்தியென்றுமாம்;
1
"அவலலையுடையை"
என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. விலகொளி எனப்
பிரித்தலுமாம் ; விலகு ஒளி - விட்டு விளங்கும் ஒளி. காரணமின்றியே
கனியைச் சிதைத்துக் கடுநோயுழந்தனை என விரித்துரைத்துக்கொள்க.
|
55--61. மந்திரம்
மறந்தேன் - வானிற் செல்லும் மந்திரத்தை மறந்து விட்டேன், ஊன்
உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி - உடம்பினின்றும் உயிர் நீங்குதற்கேதுவாகிய
வெப்பத்துடன் தோன்றி, வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்கு
- வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது மிக வருத்தாநின்றது
என்று கூறிய என்பொருட்டு, தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன ஆங்கவன்
கொணரவம் ஆற்றேனாக-நல்லனவாகிய இனிய பழங்கள் கிழங்குகள் செழிய
காய்கள் முதலியவற்றை அவன் கொணர்ந்து தரவும் எனது பசி தணியேனாக,
நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி ஆங்கவன் ஆங்கு எனக்கு அருளொடும்
உரைப்போன் - என்னைவிட்டு நீங்கலாற்றாதவனாகிய என் கணவன்மிக்க
துயரத்தையடைந்து அவ்விடத்தில் எனக்கு அருளொடும் கூறுகின்றவன் ;
|
மறந்தேன் எனவும்
வருத்தும் எனவும் கூறினேற்கு என்க. நல்லனவென்பதைக் கனி முதலிய
ஒவ்வொன்றோடுங் கூட்டுக. ஆற்றேனாக - பசி தணியப்பெறேனாக.
|
62--68. சம்புத் தீவினுள் தமிழக
மருங்கில் - நாவலந் தீவினுள் தமிழகத்திலே, கம்பம் இல்லாக்
கழிபெருஞ் செல்வர் - நடுக்கமில்லாத மிக்க பெருஞ் செல்வத்தையுடையோர்,
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி - வறியோர்கட்கு வேண்டியன கொடுக்கும்
துணைவராகி, நோற்றோர் உறைவதோர் நோன் நகர் உண்டால் - முற்பிறப்பில்
தவம்புரிந்தோர் வாழ்கின்ற பெருமையுடைய நகரமொன்று உண்டு, பலநாளாயினும்
நிலனொடு போகி - பலநாட்கழியினும் நீ நடந்து சென்று, அப்பதிப்
புகுக என்று அவன் அருள் செய்ய-அந் நகரத்திற் சேர்வாய் என்று அவன்
கூறியருள, இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்-யான் அவன்
சொல்வழியே இக் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து ஈண்டு வதிகின்றேன்
;
|
ஆற்றுதல்-கொடுத்தல்;
2
"அற்றார்க்கொன்
றாற்றாதான் செல்வம்" என்பது காண்க. நோற்றோர் பெருஞ்செல்வர்
துணையாகி உறைவதென்க. நோன்மை-ஈண்டுப் பெருமை, நிலனொடு போதல்
- காலால் நடந்து செல்லுதல்.
|
கலி. நெய்தல்: 5.
குறள். 1007.