69--74. இந்திரகோடணை விழவணி வருநாள்
- இந்திர கோடணையாகிய அழகிய விழா நடைபெறும் நாளில், வந்து
தோன்றி இம்மாநகர் மருங்கே - இப் பெரிய நகரின் மருங்கே அவ்
விஞ்சையன் வந்து தோன்றி, என்னுறு பெரும்பசி கண்டனன் இரங்கி-என்னை
வருத்துகின்ற பெரும் பசியினைக் கண்ணுற்று இரங்கி, பின்வரும யாண்டு
அவன் எண்ணினன் கழியும்-பின்னர் எனது சாபம் கழிகின்ற ஆண்டுகளை
எண்ணிக்கொண்டு அவன் நீங்குவான், தணிவில் வெம்பசி தவிர்த்தனை
- என்னுடைய தணிதலில்லாத கொடிய பசியை நீக்கினாய், வணங்கினேன்
- நின்னே வணக்கஞ் செய்தேன், மணிமேகலை என் வான்பதிப் படர்கேன்-மணிமேகலையே
இனி எனது சிறந்த பதியின்கட் செல்வேன் ;
|
75--83. துக்கம் துடைக்கும் துகள்அறு
மாதவர் - துக்கத்தைப் போக்கும் குற்றமற்ற பெருந் தவத்தோர்கள்
உறைகின்ற, சக்கரவாளக் கோட்டம் உண்டு-சக்கரவாளக் கோட்டம்
என்பதொன்றுண்டு, ஆங்கதில் பலர் புகத் திறந்த பகுவாய் வாயில்
- அதன்கண் பலரும் செல்லுமாறு திறக்கப்பட்டிருக்கின்ற பிளந்த வாய்போலும்
வாயிலினை யுடைய, உலகவறவி ஒன்றுண்டு-உலகவறவி என்னும் ஊரம்பலம்
ஒன்று உண்டு, அதனிடை-அதன்கண், ஊரூர் ஆங்கண் உறுபசி உழந்தோர்
- ஊர்தோறும் மிக்க பசியால் வருந்தினோரும், ஆரும் இன்மையின்
அரும்பிணி உற்றோர் - பாதுகாப்போர் ஒருவரும் இன்மையினால் அரிய
நோயுழந்தோருமாய், இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால்
- அன்னமிடுவோரை ஆராய்ந்து இருக்கின்றவர் பலராவர், வடு வாழ்
கூந்தல் அதன்பாற் போகென்று - வகிர் பொருந்திய குழலினை யுடையாய்
அவ்விடம் செல்வாயாக என்று கூறி, ஆங்கவள் போகிய பின்னர்-அக்
காயசண்டிகை சென்ற பின்பு ;
துக்கம் - பிறவித்துன்பம். ஊரூர் ஆங்கண் - பல ஊர்களிலும், ஆங்கு,
ஆல்: அசைகள். வடு-வகிர். கூந்தல்: விளி.
|