ஒரு தனி ஏறி - அந்த உலக வறவியின்கண் தான் தனியே சென்று, பதியோர்
தம்மொடு பலர் தொழுது ஏத்தும் - நகரிலுள்ளாருடன் பலரும் துதித்து
வணங்கும், முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி-முதியவளாகிய
சம்பாபதியின் கோயிலை மனம் மொழி மெய்களால் வணக்கஞ் செய்து,
கந்துடை நெடு நிலைக் காரணம் காட்டிய தந்துணைப் பாவையைத் தான்
தொழுது ஏத்தி - நெடிய நிலையினையுடைய தூணின்கணிருந்து பழவினையாகிய
காரணங் காட்டும் பொருட்டு எழுதப்பட்ட தம் துணையாகிய கந்திற்பாவையை
வணங்கித் துதித்து ;
மும்மையின் வணங்கி-மூன்றுமுறை
வணங்கி யென்றுமாம். நெடு நிலையுடைக் கந்து என மாறுக. காட்டுவதற்கு
மயனால் எழுதப்பட்டவென விரித்துரைக்க. "கந்துடை நெடுநிலைக் காரணங்
காட்டிய, அந்தி லெழுநிய வற்புதப் பாவை" (7:94-5) என்றற் றொடக்கத்தனவாக
இந் நூலுட் பிறாண்டு வருவன காண்க. மணிமேகலையுடன் மற்றையோரையும்
உளப்படுத்தி, ''தந்துணைப்பாவை'' என்றார்.
91--98.வெயில் சுட வெம்பிய
வேய்கரி கானத்து - ஞாயிற்றின் கதிராற் சுடப்பட்டு வெம்பிய மூங்கில்
கரிந்த காட்டின்கண், கருவி மாமழை தோன்றியது என்ன - தொகுதியாகிய
முகில்கள் தோன்றினாற்போல; பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு
- பசியானது உடலைத் தின்ன வருந்திய துன்பமுடைய மக்களுக்கு, அமுதசுரபியோடு
ஆயிழை தோன்றி - மணிமேகலை அமுதசுரபியோடு தோன்றி, ஆபுத்திரன்
கை அமுதசுரபி இஃது-ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும் இது, யாவரும்
வருக ஏற்போர் தாம் என - ஏற்போர் யாவரும் வருக என்று கூற, ஊண்
ஒலி அரவத்துஒலிஎழுந்தன்றே யாணர்ப்பேரூர் அம்பலம் மருங்கென்-உணவுண்ணும்
ஆரவாரமாகிய முழக்கம் எழுந்தது புதுவருவாயினையுடைய பேரூரின் அம்பலத்தின்கண்
என்க.
காயசண்டிகை யென்னுங்
காரிகை, நோக்கி வணங்கி, ''என்னோய் துடைப்பாய்'' என்றலும்,
மணிமேலலை பெய்தலும், அவள் பசி நீங்கித் தொழுது உரைக்கும் ;
உரைப்பவள், ''உலகவறவி யொன்றுண்டு ; அதன்பாற் போக'' என்று கூறிப்
போகிய பின்னர், ஆயிழை ஒதுங்கி வந்து வந்தனை செய்து ஏறி வணங்கித்
தொழுது ஏத்தித் தோன்றி, ஏற்போர் யாவரும் வருக'' என, அம்பல
மருங்கு ஒலியெழுந்தன்று என வினை முடிவு செய்க.