பக்கம் எண் :

பக்கம் எண் :1

Manimegalai-Book Content
1. விழாவறை காதை
 

[பண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் இயல்பினை மேம்படுத்தக் கருதிய அகத்திய முனிவர் ஆணையின்படி தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் இந்திரனை வேண்டி அவன் உடன்பாடு பெற்று இருபத்தெட்டு நாள் அந்நகரிலேயே நிகழ்த்தியதும், அவன் காலத்திற் போலவே பின்பு அவன் வழியினராகிய சோழர்களால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்பெற்று வந்ததுமாகிய இந்திர விழாவை நடத்தக் கருதிய சமயக் கணக்கர்களும் ஏனோரும் ஒருங்கூடி, இந்திரவிழாச் செய்தலை மறப்பின், முசுகுந்தன் துயரைப் போக்கிய நாளங்காடிப்பூதம் இடுக்கண் செய்யும் ; நரகரைப் புடைத்துண்ணும் சதுக்கப்பூதமும் பொருந்தாதொழியும் ஆதலின் விழாச்செய்வோமாக'' எனத் துணிந்து, அதனை முரசறையும்; முதுகுடிப் பிறந்தோனுக்கு அறிவித்தனர். அவன் வச்சிரக் கோட்டத்திருந்த முரசை யானையின் பிடரிலேற்றி, நகரையும், மழையையும், அரசனையும் வாழ்த்தி, இந்திரவிழாச் செய்யும் நாட்களில் தேவரனைவரும் பொன்னகர் வறிதாகும்படி இங்கெழுந்தருளுவரென்பது அறிஞர் துணிபாகலின், நகரினுள்ளீர் ! வீதி முதலியவற்றை நிறைகுடம், பொற்பாலிகை, பாவைவிளக்கு, கமுகு, வாழை, வஞ்சி, கரும்பு, முத்துமாலை, தோரணம், கொடி முதலிய பலவற்றானும் அணிசெய்ம்மின்; சிவபிரான் முதல் சதுக்கப்பூதம் ஈறாகவுள்ள தெய்வங்கட்குச் செய்யும் வழிபாட்டினை அறிந்தோர் செய்ம்மின்; புண்ணிய நல்லுரை அறிவீர்! பந்தரிலும் அம்பலத்திலுஞ்சென்று அறவுரைகூறுமின்; சமய வாதிகளே! பட்டி மண்டபத்தில் ஏறி முறைமையால் வாது செய்ம்மின்; பகைவருடனாயினும் யாவரும் செற்றமும் கலாமும் செய்யாதொழிமின்,'' என்று கூறி விழா வறைந்தனன்.]

 



5





10

உலகந் திரியா ஓங்குயர் விழுச்சீர்ப்
பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய
ஓங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத்
தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கிமுன் னின்று

மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோ ளெடுத்த
நாலேழ் நாளினும் நன்கினி துறைகென
அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவா ராகலின்

மெய்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்
இத்திறந் தத்தம் இயல்பினிற் காட்டும்