பக்கம் எண் :305 |
|
Manimegalai-Book Content
22.
சிறைசெய் காதை
|
20
25
30
35
40
45
50
|
கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து
பத்தினிப் பெண்டிர் பாற்செறன் றணுகியும்
நற்றவப் பெண்டிர் பின்னுளம் போக்கியும்
தீவினை யுருப்ப உயிரீறு செய்தோர்
பாராள் வேந்தே பண்டும் பலரால்
மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகா 1 தொழி
நீயெனக்
கன்னி யேவலின் காந்த மன்னவன்
இந்நகர் காப்போர் யாரென நினைஇ
நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குறக்
காவற் கணிகை தனக்காங் காதலன்
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுத லில்லோன்
ககந்த னாமெனக் காதலிற் கூஉய்
அரசா ளுரிமை நின்பா லின்மையின்
பரசு ராமனின் பால்வந் தணுகான்
அமர முனிவ னகத்தியின் றனாது
துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
ககந்தன் காத்தல் காகந்தி யென்றே
இயைந்த நாமம் இப்பதிக் கிட்டீங்
குள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள்
தெள்ளுநீர்க் காவிரி யாடினள் வரூஉம்
பார்ப்பனி மருதியைப் பாங்கோ ரின்மையின்
யாப்பறை யென்றே யெண்ணின னாகிக்
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
நீவா என்ன நேரிழை கலங்கி
மண்திணி ஞாலத்து மழைவளந் தரூஉம்
பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறனுளம் புரிநூன் மார்பன்
முத்தீப் பேணும் முறையெனக் கில்லென
மாதுய ரெவ்வமொடு மனையகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
கொண்டோற் பிழைத்த குற்றந் தானிலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பெளி தாயினேன் |
1
தொளி.
|
|
|
|
|