பக்கம் எண் :306 |
|
Manimegalai-Book Content
22.
சிறைசெய் காதை
|
55
60
65
70
75
80
85
|
வான்தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான்செய் குற்றம் யானறி கில்லேன்
பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீயெனச் சேயிழை யரற்றலும்
மாபெரும் பூதந் தோன்றி மடக்கொடி
நீகே ளென்றே நேரிழைக் குரைக்கும்
தெய்வம் தொழாஅள் கொழுநற் றெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்
கடவுள் பேணல் கடவியை யாகலின்
மடவரல் ஏவ மழையும் பெய்யாது
நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப்
பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியு மில்லை
ஆங்கவை யொழிகுவை யாயி னாயிழை
ஓங்கிரு வானத்து மழையுநின் மொழியது
பெட்டாங் கொழுகும் பெண்டிரைப் போலக்
கட்டா துன்னையென் கடுந்தொழிற் பாசம்
மன்முறை யெழுநாள் வைத்தவன் வழூஉம்
பின்முறை யல்ல தென்முறை யில்லை
ஈங்கெழு நாளில் இளங்கொடி நின்பால்
வரங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டுக் கடிதலு முண்டென
இகந்த பூதம் எடுத்துரை செய்ததப்
பூத முரைத்த நாளா லாங்கவன்
தாதை வாளால் தடியவும் பட்டனன்
இன்னுங் கேளாய் இருங்கட லுடுத்த
மண்ணாள் செல்வத்து மன்னவ ரேறே
தரும தத்தனுந் தன்மா மன்மகள்
பெருமதர் மழைக்கண் விசாகையும் பேணித்
தெய்வுங் காட்டுந் திப்பிய ஓவியக்
கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்
|
|
|
|
|