பக்கம் எண் :307 |
|
Manimegalai-Book Content
22.
சிறைசெய் காதை
|
90
95
100
105
110
115
|
1
கொத்தன
ளென்றே யூர்முழு தலரெழப்
புனையா வோவியம் புறம்போந் தென்ன
மனையகம் நீங்கி வாணுதல் விசாகை
உலக அறவியி னூடுசென் றேறி
இலகொளிக் கந்தின் எழுதியபாவாய்
உலகர் பெரும்பழி யொழிப்பாய் நீயென
மாநக ருள்ளீர் மழைதரு மிவளென
நாவுடைப் பாவை நங்கையை யெடுத்தலும்
தெய்வங் காட்டித் தெளித்திலே னாயின்
மைய லூரோ மனமா சொழியாது
மைத்துனன் மனையாள் மறுபிறப் பாகுவேன்
இப்பிறப் பிவனொடுங் கூடே னென்றே
நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி
மற்றவள் கன்னி மாடத் தடைந்தபின்
தரும தத்தனும் தந்தையுந் தாயரும்
பெருநகர் தன்னைப் பிறகிட் டேகித்
தாழ்தரு துன்பந் தலையெடுத் தாயென
நாவுடைப் பாவையை நலம்பல ஏத்தி
மிக்கோ ருறையும் விழுப்பெருஞ் செல்வத்துத்
தக்கண மதுரை தான்சென் றடைந்தபின்
தரும தத்தனுந் தன்மா மன்மகள்
விரிதரு பூங்குழல் விசாகையை யல்லது
பெண்டிரைப் பேணேன் இப்பிறப் பொழிகெனக்
கொண்ட விரதந் தன்னுட் கூறி
வாணிக மரபின் வருபொரு ளீட்டி
நீள்நிதிச் செல்வனாய் நீள்நில வேந்தனின்
எட்டிப் பூப்பெற் றிருமுப் பதிற்றியாண்
டொட்டிய செல்வத் துயர்ந்தோ னாயினன்
அந்த ணாள னொருவன் சென்றீங்
கென்செய் தனையோ விருநிதிச் செல்வ
பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும்
புத்தே ளுலகம் புகாஅ ரென்பது
கேட்டு மறிதியோ கேட்டனை யாயின்
|
1
கொத்தன ரென்றே.
|
|
|
|
|