120
125
130
135
140
145
150
|
நீட்டித் திராது நின்னக ரடைகெனத்
தக்கண மதுரை தான்வறி தாக
இப்பதிப் புகுந்தனன் இருநில வேந்தே !
மற்றவ னிவ்வூர் வந்தமை கேட்டுப்
பொற்றொடி விசாகையும் மனைப்புறம் போந்து.
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
அல்லவை கடிந்த அவன்பாற் சென்று
நம்முணா மறிந்திலம் நம்மை முன்னாள்
மம்மர் செய்த வனப்பியாங் கொளித்தன
ஆறைந் திரட்டி யாண்டுனக் காயதென்
நாறைங் கூந்தலும் நரைவிரா வுற்றன
இளமையுங் காமமும் யாங்கொளித் தனவோ
உளனில் லாள எனக்கீங் குரையாய்
இப்பிறப் பாயின்யான் நின்னடி யடையேன்
அப்பிறப் பியான்நின் னடித்தொழில் கேட்குவன்
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா
புத்தே ளுலகம் புதல்வருந் தாரார்
மிக்க அறமே விழுத்துனை யாவது
தானஞ் செய்யெனத் தரும தத்தனும்
மாமன் மகள்பால் வான்பொருள் காட்டி
ஆங்கவ னவளுடன் செய்த நல்லறம்
ஓங்கிரு வானத்து மீனினும் பலவால்
குமரி மூத்தஅக் கொடுங்குழை நல்லாள்
அமர னருளால் அகனக ரிடூஉம்
படுபழி நீங்கிப் பல்லோர் நாப்பண்
கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல்
மருதி பொருட்டான் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமங் காழ்கொளச்
சுரியிரும் பித்தை சூழ்ந்துபுறந் தாழ்ந்த
விரிபூ மாலை விரும்பினன் வாங்கித்
தொல்லோர் கூறிய மணமீ தாமென
எல்லவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செங்கை
|