155
160
165
170
175
180
185
|
நீலக் குஞ்சி நீங்கா தாகலின்
ஏறிய செங்கை யிழிந்தில திந்தக்
காரிகை பொருட்டெனக் ககந்தன் கேட்டு
கடுஞ்சினந் திருகி மகன்றுயர் நோக்கான்
மைந்தன் றன்னை வாளா லெறிந்தனன்
ஊழிதோ றூழி யுலகங் காத்து
வாழி யெங்கோ மன்னவ என்று
மாதவர் தம்முளோர் மாதவன் கூறலும்
வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன்
இன்றே யல்ல என்றெடுத் துரைத்து
நன்றறி மாதவிர் நலம்பல காட்டினிர்
இன்று முளதோ இவ்வினை யுரைமென
வென்றி நெடுவேல் வேந்தன் கேட்பத்
தீதின் றாக செங்கோல் வேந்தென
மாதவர் தம்முளோர் மாதவ னுரைக்கும்
முடிபொரு ளுணர்ந்தோர் முதுநீ ருலகில்
கடியப் பட்டன வைந்துள அவற்றில்
கள்ளும் பொய்யுங் களவுங் கொலையும்
தள்ளா தாகுங் காமம் தம்பால்
ஆங்கது கடிந்தோ ரல்லவை கடிந்தோரென
நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள்
நீங்கா ரன்றே நீணில வேந்தே
தாங்கா நரகந் தன்னிடை யுழப்போர்
சேயரி நெடுங்கண் சித்திரா பதிமகள்
காதல னுற்ற கடுந்துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியு ளடைந்தனள்
மற்றவள் பெற்ற மணிமே கலைதான்
முற்றா முலையினள் முதிராக் கிளவியள்
செய்குவன் தவமெனச் சிற்றிலும் பேரிலும்
ஐயங் கொண்டுண் டம்பல மடைந்தனள்
ஆங்கவ ளவ்வியல் பினளே யாயினும்
நீங்கா னவளை நிழல்போல் யாங்கணும்
காரிகை பொருட்டால் காமங் காழ்கொள
ஆரிரு ளஞ்சான் அம்பல மடைந்தனன்
|