உரை
1--4. கடவுள்
மண்டிலம் கார்இருள் சீப்ப-ஞாயிற்று மண்டிலம் கரிய இருளை ஒட்டித் தோன்ற,
நெடுநிலைக் கந்தின் நின்ற பாவையொடு- நெடிய நிலையாகிய தூணின்கண் உள்ள
பாவையுடன், முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்-சம்பாபதி கோயிலையும்
வழிபாடு செய்வோர், உதயகுமரற்கு உற்றதை உரைப்ப-உதய குமரனுக்கு நேர்ந்த
துன்பத்தைக் கூற :
|