[இந்திரவிழா
நடைபெற்றது. அந் நன்னாளில் மாதவியும் மணிமேகலையும் வழக்கப்படி ஆடுவதற்கு
வாராமையின் மனம் வருந்திய சித்திராபதி மாதவியின் றோழியாகிய வயந்தமாலையை
அழைத்து, ''ஊரார் கூறும் பழிமொழியை மாதவிக்கு உரைப்பாய்'' என விடுக்க,
அவள் சென்று மாதவியும் மணிமேகலையும் இருந்த மலர்மண்டபத்தை அடைந்து மாதவியின்
தவத்தால் வாடிய உடம்பினைக் கண்டு வருந்தி, ''நாடக மகளிர்க்குரிய கலைகள்
பலவும் கற்றுத் துறைபோகிய நீ விழாவிற்கு வாராமலும், மரபிற் கொவ்வாத
தவவொழுக்கம் பூண்டுமிருத்தல் பற்றி ஊரார் பலரும் கூடி யுரைக்கும் பழிமொழிகள்
நாணுந்தகையன" என்றுரைத்தனள். அதுகேட்ட மாதவி, அவளை நோக்கி, ''காதலனுற்ற
கடுந்துயர் பொறாது, காவலன் பேரூர் கனையெரி யூட்டிய மாபெரும் பத்தினியாகிய
கண்ணகியின் மகள் மணிமேகலை தவநெறிச் செல்லுதற் குரியளன்றி, இழிந்த பரத்தமைத்
தொழிலுக்குரியளல்லள்; ஆதலின் அவள் அங்கே வாராள்; நான் இங்கு வந்து அறவணவடிகளின்
அடிமிசை வீழ்ந்து, காதலனுற்ற கடுந்துயரைக் கூறி வருந்த, அவர்,
''பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக''
என்று நால்வகை வாய்மைகளையும் எனக்கு அருளிச்செய்து, பஞ்சசீலத்தையும், அறிவுறுத்தி,
இவற்றைக் கடைப்பிடிப்பாய் என்று அருள்செய்தனர்; ஆதலின் நானும் அங்கு வருதற்குரியே
னல்லேன்; இச்செய்தியை ஆயத்தார்க்கும், என் நற்றாய் சித்திராபதிக்கும்
சொல்,'' என்று கூற, வயந்த மாலை பெறுதற்குரிய மாணிகத்தைக் கடலில் வீழ்த்தினோர்
போன்று செயலற்றுச் சித்திராபதியிடம் மீண்டனள். (இதன்கண் நாடக மகளிர்க்கு
உரிய பல கலைவகைகளும், மூவகைப் பத்தினிப் பெண்டி ரியல்புகளும் கூறப்பட்டுள்ளன.)]
5 |
நாவ லோங்கிய
மாபெருந் தீவினுள்
காவற் றெய்வதந் தேவர்கோற் கெடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்
மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பந் தலைத்தலை மேல்வரச்
சித்திரா பதிதான் சொல்லலுற் றிரங்கித்
தத்தரி நெடுங்கட் டன்மக டோழி
வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப் |
|