பக்கம் எண் :

பக்கம் எண் :10

Manimegalai-Book Content
1. விழாவறை காதை
 

அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் - அகநகரிடத்தே
அழகிய விழாவைத் தெரிவித்தனன் என்க.

பகை-காமம் முதலிய உட்பகையுமாம். அகநகர்-பட்டினப்பாக்கம். என் : அசை. 1 "பசியும் பிணியும் பகையு நீங்கி, வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி" எனச் சிலப்பதிகாரத்தும் இத்தொடர் முழுதும் வந்துள்ளமை காண்க. முதுகுடிப் பிறந்தோன் முரசத்தை ஏற்றி இயம்பி ஏத்திச் சுரக்கென வாழ்த்தித் துணிபொருளாதலின் நாலேழ் நாளினும் நன்கறிந்தீராய்ப் பரப்புமின், நடுமின், நாற்றுமின், மாற்றுமின், பரப்புமின், சேர்த்துமின், செய்யுமின், பொருந்துமின், ஏறுமின், அகலுமின் என அகநகர் மருங்கு விழாவை அறைந்தனன் என்க.

விழாவறை காதை முற்றிற்று.


1 சிலப். 5 ; 723