பக்கம் எண் :

பக்கம் எண் :13

Manimegalai-Book Content
2. ஊரலருரைத்த காதை
 


45




50







55





60





65





70





75
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்கா(து)
இன்னுயி ரீவர் ஈயா ராயின்
 நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்

நளியெரி புகாஅ ராயின் அன்பரோ(டு)
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர் பரபபுநீர் ஞாலத்து
அத்திறத் தாளும் அல்லளெம் மாயிழை
கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள்

மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீ ராடிய கதிரிள வனமுலை
திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக்
காவலன் பேரூர் கனையெரி யூட்டிய
மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை

அருந்தவப் படுத்தல் அல்ல தியாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படா அள்
ஆங்ஙன மன்றியும் ஆயிழை கேளாய்
ஈங்கிம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மறவணம் நீத்த மாசறு கேள்வி

அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து
மாபெருந் துன்பங் கொண்டுள மயங்கிக்
காதல னுற்ற கடுந் துயர் கூறப்
பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்
பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்

பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோ ருறுவ தறிகென் றருளி
ஐவகைச் சீலத் தமைதியுங் காட்டி
உய்வகை இவைகொளென் றுரவோ னருளினன்
மைத்தடங் கணணார் தமக்குமெற் பயந்த

சித்திரா பதிக்குஞ் செப்பு நீயென
ஆங்கவ ளுரைகேட் டரும்பெறன் மாமணி
ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்தென்.