பக்கம் எண் :

பக்கம் எண் :14

Manimegalai-Book Content
2. ஊரலருரைத்த காதை

உரை

1--9.

நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் காவல் தெய்வதம் தேவர்
கோற்கு எடுத்த - நாவல் எனப் பெயர் சிறந்த மிகப் பெரிய
தீவினுள்ளேஅதன் காவற்றெய்வமாகிய சம்பாபதியால் இந்திர
னுக்கு எடுக்கப்பட்ட, தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் - தீவ
சாந்தியாகிய இந்திர விழவினைச் செய்கின்ற நன்னாளில், மணிமே
கலையொடு மாதவி வாரா - மணிமேகலையுடன் மாதவியும் வாராமையா
லுண்டான,தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர-ஆறுத்துயர்
மேன்மேல் மிகாநிற்க, சித்திராபதிதான் செல்லல் உற்று இரங்கி -
சித்திராபதி மிகவுந் துன்பமுற்று வருந்தி, தத்துஅரி நெடுங்கண்
தன்மகள் தோழி-செவ்வரி படர்ந்து பாய்கின்ற நீண்ட கண்
களையுடையதன் புதல்வி மாதவியின் தோழியாகிய, வயந்த மாலையை
வருக எனக் கூய்-வயந்தமாலையை வாவென்று அழைத்து, பயங்
கெழுமா நகர் அலர் எடுத்து உரை என-நீ சென்று பயன் சிறந்த
பெரிய நகரினுள்ளார் கூறும் அலரை மாதவிக்கு எடுத்துக் கூறு
வாயாக என்று உரைப்ப ;

நாவல் மரம் ஓங்கியுள்ளமையால் அப் பெயர்பெற்ற தீவு என்றுமாம். பெருந் தீவுகளுள் ஒன்றுதலின் இது மாபெருந் தீவு எனப்பட்டது. "நால்வகை மரபின் மாபெருந் தீவும்" (6:195) என்பர் மேலும். பண்டு எடுத்தமையால் தீவகச் சாந்தியெனப் பெயர்பெற்ற இந்திர விழாவைச் செய்யும் இந் நன்னாளில் என விரித்துரைக்க. விழாவிற்கு ஆடல் பாடல் நிகழ்த்த வாராமையால் என்க வாராத்துன்பம் தணியாமல் மேல்வர என்றுமாம். தத்துஅரி-அரி படர்ந்த எனலுமாம்.

10--7;

வயந்த மாலையும் மாதவி துறவிக்கு அயர்ந்து மெய்வாடிய
அழிவினள் ஆதலின் - வயந்த மாலையும் மாதவியினது துறவிற்கு
மனந்தளர்ந்து உடல் வாடிய வருத்த முடையவள் ஆகலான்,
மணிமேகலையோடு மாதவி இருந்த அணி மலர் மண்டபத்து அக
வயின் செலீஇ - மணிமேகலையுடன் மாதவியிருந்த அழகிய மலர்
மண்டபத்தின் உள்ளே சென்று, ஆடிய சாயல் ஆயிழை மடந்தை
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி - அசைகின்ற மென்
மையினையுடைய மாதவியினது தவத்தான் வாட்டமுற்ற யாக்
கையைக்கண்டு மனம் வருந்தி, பொன்னேரனையாய் - திருமகள்
போல் வாய், புகுந்தது கேளாய் - இப்பொழுது நேர்ந்தனைக்
கேட்பாயாக, உன்னோடு இவ்வூர் உற்றது ஓன்று உண்டுகொல் -
நின்னோடுஇவ்வூர் உற்றதாகிய பகைமை ஓன்றுண்டோ;

துறவி - துறவு ; " 1 துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும்" என்
பது காண்க. பொன்-திருமகள். நேரனையாய் - நேரொப்பாய் ; உவமச்


1 சிலப். 27 : 95.