பக்கம் எண் :

பக்கம் எண் :15

Manimegalai-Book Content
2. ஊரலருரைத்த காதை
 

சொல் இரண்டிணைந்தது. ஊரார் அலர் தூற்றுவது பகைமையா
லன்றென்பாள் ''உற்றதொன் றுண்டுகொல்'' என்றாள்.

18--37.

வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்
கூத்தும் - வேத்தியலும் பொதுவியலும் என்று இருவகைப்பட்ட
கூத்தும், பாட்டும்-இசையும், தூக்கும் - தாளங்களின்
வழிவரும் செந்தூக்கு முதலிய ஏழு தூக்குக்களும், துணிவும்
- தாள வறுதியும், பண்ணியாழ்க் கரணமும்-பண்ணுடன்
பொருந்திய யாழின் செய்கைகளும், பாடைப் பாடலும் -
அகநாடகம் புறநாடகம் என்பவற்றிற்கு உரிய உருக்களும்,
தண்ணுமைக் கருவியும் - உத்தமத் தோற்கருவியாகிய மத்
தளமும், தாழ் தீங் குழலும் - இனிமை பொருந்திய வேய்ங்
குழலும், கந்துகக் கருத்தும்-பந்தாடும் தொழிலும்.மடைநூற்
செய்தியும் - பாக சாத்திர முறைப்படி அடுதற் றொழிலும்,
சுந்தரச் சுண்ணமும்-நிறமமைந்த நறுமணப் பொடியும்,
தூநீர் ஆடலும்-நன்னீராடலும், பாயற்பள்ளியும் -
பாயலிடமும், பருவத்து ஒழுக்கமும்-காலங்கட்கேற்ப
ஒழுகும் ஒழுக்கமும், காயக்கரணமும்-காயத்தாற் செய்யும்
அறுபத்துநான்கு வகைக் கரணங்களும், கண்ணியது உணர்தலும்-
பிறர் கருதியதை அறிந்து கொள்ளுதலும், கட்டுரை வகையும் -
தொடுத்துக் கூறும் சொல் வன்மையும் கரந்துறை கணக்கும்-
மறைந்துறையும் வகையும், வட்டிகைச் செய்தியும் -
எழுதுகோலினால் எழில்பட வரையும் தொழிலும், மலர்
ஆய்ந்து தொடுத்தலும் - பூக்களை ஆராய்ந்தெடுத்துக்
கட்டுதலும், கோலம் கோடலும் - அவ்வப்பொழுதிற்கேற்ப
ஒப்பனைசெய்து கொள்ளுதலும், கோவையின் கோப்பும் - முத்து
முதலியவற்றைக் கோவையாகக் கோத்தலும், காலக்கணிதமும் -
சோதிடமும்; கலைகளின் துணிவும் - மற்றமுள்ள கலைகளின்
துணிந்த பொருளும், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த -
நாடகக் கணிகையர்க்கென நன்கு வகுக்கப்பட்ட, ஓவியச் செந்
நூல் உரை நூற் கிடக்கையும் - செவ்விய நூலாகிய புகழமைந்த
ஓவிய நூலிற் கூறப்பட்டனவும், கற்றுத் துறைபோகிய பொற்றொடி
நங்கை-கற்று அவைகளிற் கைதேர்ந்த பொன்வளையணிந்த
மாதவி, நற்றவும் புரிந்தது நாணுடைத்து என்றே - துறவு பூண்டு
நற்றவும் செய்வது நாணமுடைத்தாகும் என்று, அலகில் மூதூர்
ஆன்றவர் அல்லது-இம்மூதூரிலுள்ள அறிவானமைந்த அளவற்ற
பெரியோர்கள் அல்லாமல், பலர் தொகுபு உரைக்கும் பண்பில்
வாய்மொழி-பலருங்கூடிய கூறும் நலமில்லாத வாய்மொழி, நயம்
பாடு இல்லை - இனிதாதல் இல்லை, நாண் உடைத்து என்ற -
அதனால் நின்செய்கை நாணுந்தன்மை யுடைத்தாம் என்று கூறிய,
வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும் - தோழியாகிய வயந்த
மாலைக்கு மாதவி கூறூவான் ;