பக்கம் எண் :

பக்கம் எண் :16

Manimegalai-Book Content
2. ஊரலருரைத்த காதை

வேத்தியல் - அரசர்க்காடுங் கூத்து ; பொதுவியல் - எல்லார்க்கும் ஒப்ப ஆடுங் கூத்து ; 1 "வேத்தியல் பொதுவிய லென்றிரு திறத்து... ஆடலும்," என்பது காண்க. தூக்கு எழினையும், "ஒருசீர்செந்தூக் கிரு சீர் மதலை, முச்சீர் துணிவு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறுசீர் கழாலே, எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்," என்பதனாலறிக. யாழ்க்கரணம் - பண்ணல் முதலிய எட்டும், வார்தல் முதலிய எட்டுமாம்; இவற்றைச் சிலப்பதிகாரத்துக் கானல் வரியிற் காண்க. தாழ்தல் - தங்குதல். பருவம் - கார்முதலியன. காலக் கணிதம் - சோதிட மாதலை, 2 "ஆயுள் வேதரும் காலக் கணிதரும்," என்பதனா லறிக. கலைகள் என்றது பரத்தையர்க் குரியவாகக் கூறப்படும் அறுபத்து நான்கு கலைகளுள் ஈண்டுக் கூறாதொழிந்தனவாகும். பரத்தையர்க்குரிய கலைகள் அறுபத்துநான்கு என்பதனை, 3 "பண்ணுங் கிளியும் பழித்த தீஞ்சொல், எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்," 4 "எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற, பண்ணியன் மடந்தையர்," 5 "யாழ்முதலாக வறுபத் தொருநான், கேரிள மகளிர்க்கியற்கையென் றெண்ணிக், கலையுற வகுத்த காமக் கேள்வி," என்பவற்றானறிக. நன்கனம் - நன்றாக ; இச்சொல், "நன்கன நீத்து," (3 : 88) "நன்கன நவிற்றி" (13-24) "நன்கன மறிந்தபின்" (13 : 26) என இக் காப்பியத்துட் பயின்று வந்துளது. வாய்மொழி நாணுடைத் தெனினுமாம்.

38--41.

காதலன் உற்ற கடுந்துயர் கேட்டு - என் காதலனாகிய
கோவலன் அடைந்த கொடிய துனபத்தினைக் கேள்வியுற்று,
போதல் செய்யா உயிரோடு நின்றே - உடலைவிட்டு நீங்காத
உயிருடன்நின்று, பொற்கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து -
அழகிய கொடிகளையுடைய இத் தொன்னகரத்தாருடைய புகழுரையை
இழந்து, நற்றொடி நங்காய் - நல்ல வளையல்களுடைய
வயந்தமாலையே, நாணுத் துறந்தேன் - நாணத்தையும்
விட்டேன் ;

கடுந்துயர் - மிக்க துயர் ; என்றது கோவலன் கொலையுண்டது , இக்காதையுள்ளே பின்னரும் (2 : 50-63) கடுந்துயர் என வருதல் காண்க. மூதூர்:ஆகுபெயர். பொருளுரை-புகழுரை. நங்காய் கேட்டு நின்று இழந்து துறந்தேன் என்றாளென்க.

42-49.

காதலர் இறப்பின் - கற்புடை மகளிர்க்கு உயிரினுஞ் சிறந்த
கணவன் இறந்தால், கனைஎரி பொத்தி - துயரமாகிய மிக்க
நெருப்பு மூளப்பட்டு, ஊது உலைக் குருகின் உயிர்த்து -
உலையில் ஊதும் துருத்தி மூக்கினைப்போல் வெய்தாக
உயிர்த்து,அகத்து அடங்காது - துன்பம் உள்ளத்தே
அடங்கப்பெறாது, இன்னுயிர்


1 சிலப். 14 : 148-50. 2 சிலப். 5 : 44. 3 சிலப். 14:164-7.
4
சிலப். 22 - 138-9. 5 பெருங். 1. 35 : 84-6.