பக்கம் எண் :

பக்கம் எண் :17

Manimegalai-Book Content
2. ஊரலருரைத்த காதை

ஈவர்-உடன் தமது இனிய உயிரைக் கொடுப்பர் ; ஈயார்
ஆயின் -அங்ஙனம் கொடாராயின், நல்நீர்ப் பொய்
கையின் நளிஎரி புகுவர்-நல்ல குளிர்ந்த நீரினையுடைய
பொய்கையில் ஆடுபவர்போலச் செறிந்த நெருப்பின்கட்
புகுவர் ; நளிஎரி புகாஅர் ஆயின் -அவ்வாறு தீயிடைக்
குளியாராயின், அன்பரோடு உடன் உறை வாழ்க்கைக்கு
நோற்று உடம்பு அடுவர்-மறுமைக்கண் தம் அன்பரோடு
உடன் உறையும் வாழ்க்கையின் பொருட்டுக் கைம்மை
நோன்பினை நோற்று உடம்பினை வருத்துவர்;
பத்தினிப் பெண்டிர்-கற்புடை மகளிராவார். பரப்பு நீர்
ஞாலத்து - கடல் சூழ்ந்த நிலவுலகிலே, அத்திறத்தாளும்
அல்லன் எம் ஆயிழை - எம் கண்ணகியோ
அவ்வகையிர் சேர்ந்தவளும் அல்லன் ;

பொத்தி-மூட்டி; மூளப்பட்டென்க. உயிர் ஈவர் - உடனிறப்பர் என்றபடி; இதனை மூதானந்தம் என்பர்; 1 "ஒருயிராக வுணர்க உடன், கலந்தோர்க், கீருயி ரென்ப ரிடைதெரியார்-போரில், விடனேந்தும் வேலோற்கும், வெள்வளையி னாட்கும், உடனே யுலந்த துயிர்," என்பது காண்க; பாண்டியன் நெடுஞ்செழியன் இறப்ப அவன் மனைவியாகிய பெருங்கோப்பெண்டு ''தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்,'' உடனுயிர் நீத்த வரலாறு ஈண்டு அறிதற்குரியது. கணவரை யிழந்த பத்தினிப் பெண்டிர்க்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மையினை வாதலை, பூதப்பாண்டியன்தேவி தீப்பாய்வாள் கூறிய, 2 "பெருந்தோட் கணவன் மாயந்தென வரும்பற, வள்ளித ழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையுந் தீயுமோரற்றே," என்பதனானும் அறிக. கைம்மை நோன்பின் இயல்பு, 3 "வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட, வேளை வெந்தை வல்சி யாகப், பாற்பெய் பள்ளிப் பாயின்று வதியும், உயவற் பெண்டிர்," என்பதனானறியப்படும். அத்திறத்தாளும் அல்லள் - அம்மூன்று திறத்தாருள் அடங்குபவளல்லள்; வேறு சிறப்புடையாள் என்றபடி. ஞாலத்துப் பத்தினிப் பெண்டிர் காதலர் இறப்பின் இன்னுயிரீவர், நளியெரி புகுவர், நோற்றுடம்படுவர்; எம் ஆயிழை அத்திறத்தாளுமல்லள் என்க.

50--57.

கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள் - கொழுநனுக்கு
நேர்ந்த கொடுந்துயரைப் பெறாதவளாய், மணமலி கூந்தல் சிறு
புறம் புதைப்ப - மணம் நிறைந்த கூந்தல் பிடரிடத்தை மறைத்து
விரிந்து கிடப்ப, கண்ணீர் ஆடிய கதிர் இள வனமுலை -
கண்ணீரால் நனைந்த கதிர்த்த அழகிய இளங்கொங்கையை
திண்ணிதில் திருகித் தீயழல் பொத்தி-திண்மையுடன் திருகி
அழலை மூட்டி, காவலன் பேரூர் கனைஎரி ஊட்டிய - பாண்டி
யனது பேரூராகிய மதுரையை மிகுந்த நெருப்பினாலுண்பித்த,
மாபெரும் பத்தினிமகள் மணிமேகலை - மிகச் சிறந்த தெய்வக்
கற்பினையுடைய கண்ணகியின் மகளாகிய மணிமேகலை,
அருந்தவப் படுத்தல்


1 பு.வெ. 262. 2 புறம். 245. 3 புறம். 246.