பக்கம் எண் :

பக்கம் எண் :18

Manimegalai-Book Content
2. ஊரலருரைத்த காதை

அல்லது - அரிய தவநெறியிற் சேர்க்கப்படுத லல்லது, யாவதும் -
சிறிதும்,திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் - இழிந்த
செய்கையையுடைய பரத்தமைத் தொழிலிற் சேர்க்ப்படாள்;

சிறுபுறம் - பிடர் ; முதுகுமாம். சிறுபுறம் புதைப்ப என்றதனால் கூந்தல் அவிழ்ந்து கிடந்ததென்றவாறாயிற்று. தீயழல் - ஒரு பொருளிரு சொல் : கொடிய அழலுமாம். அவள் மாபெரும் பத்தினியாவள் : அவள் மகள் மணிமேகலை தீத்தொழிற் படாள் ; என அறுத்துரைக்க. தன் மகளைக் கண்ணகியின் மகளென்று உரிமை பாராட்டிக் கூறினாள் ; அதனால் மணிமேகலையின் மாண்பு தெரித்தல் கருதியுமாம். தீத் தொழிற் படா அள் - தீத்தொழிற் படுத்தற்குரியளல்லள் என்க.

58--69.

ஆங்ஙனம் அன்றியும் - அஃதன்றியும், ஆயிழை கேளாய் -
வாய்ந்தமாலையே கேட்பாயாக, ஈங்கு இம்மாதவர் உறைவிடம்
புகுந்தேன்-இங்கு இச்சங்கத்தார் உறையுமிடம் புகுந்த யான்,
மறவணம்நீத்த மாசறு கேள்வி - பாவத் தன்மைகளைத் துறந்த
குற்றமற்றமெய்யறிவுடையரான, அறவண வடிகள் அடிமிசை
வீழ்ந்து-அறவணவடிகளின் திருவடிமீது விழுந்து, மாபெருந்
துன்பங்கொண்டுஉளம் மயங்கி-மிக்க பெருந்துன்பத்துடன்
மணங்கலங்கி, காதலன்உற்ற கடுந்துயர் கூற-என் காதலன்
அடைந்த கொடிய துயரத்தைக்கூற, பிறந்தோர் உறுவது
பெருகிய துன்பம் - உலகில் பிறந்தவர் அடைவது
பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும்
பேரின்பம்-பிறவாதவர் அடைவது மிக்க பற்றின்வருவது
முன்னது-முதற்கண் கூறப்பட்ட பிறப்புப்பற்றினால் உண்டாவது,
பின்னது அற்றோர் உறுவது - பின்னருரைத்த பிறவாமை
பற்றினை அற்றோர் அடைதற்குரியது, அறிக என்று அருளி -
இவற்றை அறிவாயாகவென்று நால்வகை வாய்மையையும் அருளிச்
செய்து, ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி - காமம்,
கொலைகள், பொய்,. களவு என்னும் ஐந்தினையும் முற்றத்
துறந்தலாகியஐவகைச் சீலங்களையும் உணர்த்தி, உய்வகை
இவைகொள் என்று-உய்யும் வழி இவையே இவற்றைக்
கொள்க என்று உரவோன் அருளினன்-திண்ணிய
அறிவினையுடைய அவ்வடிகள் அருளினர் ;

ஆங்ஙனமன்றியும் கேளாய் என்றது மணிமேகலை பரத்தைமைக் குரியளல்லாக் காரணம் அதுவாம்; யாம் இருவேமும் தவநெறி நிற்றற்குரிய காரணத்தையும் கேள் என்றபடி, மாதவர்-பௌத்த சங்கத்தார். பாவங்கள் பத்துவகைப்படு மென்பர். இவற்றின் விரியை இந்நூலின் 24:30-ஆம் காதைகளானறிக. பிறவார்-பிறப்பினீங்கினோர்; வீடுபெற்றோர், ''பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்'', என்பது முதலியவற்றால் துக்கம், துக்க நிவாரணம், துக்கோற்பத்தி, துக்க நிவாரண மார்க்கம்