பயனை ஆண்டுச்சென்று நுகர்தல்
வேண்டுமென்றும் கூறுவது பொய்யென்றும் பூதவாதி கூறினானாக எ - று.
பூதங்களில் உணர்வுடையனவும்
இல்லனவுமென இருகூறுள வென்றும், உணர்வுடைய வுயிரும் அஃதில்லாத வுடம்பும் அவ்வப்பூதங்களின்
கூட்டத்தால் உண்டாமென்றும் கொள்வதனால் பூதவாதிஉலகாயதரில் வேறுபடுகின்றான்.
பிற கருத்துள்ளவர்களில் பூதவாதியின் கொள்கை உலகாயதரின் கொள்கையொடு ஒத்ததே
என்றற்கு, "வேறுரை விகற்பமும் உண்மைப் பொருளும் உலகாயதன் உணர்வே" என்றான்.
உண்மைப் பொருள் என்றது தத்துவத்தை, அச்சொற்கு அதுபொருள். நீலகேசியுடையார்
காட்டும் பூதவாதத்தில், ஐந்து பூத முங்கூடி அறிவும் இன்றமும் முதலியவற்றைத் தோற்றுவிக்கும்:
(858) என்று கூறப்படுகிறதே யன்றி, பூதக்கூட்டத்தை உணர்வுடைப் பூதன், உணர்வில்
பூதமென்று பிரித்து இம்மணிமேகலை கூறும் கூற்றுக்கூறப் படவில்லை.
277--89. எல்லா மார்க்கமும் கேட்டு-இங்ஙனம் கூறிவந்தஎல்லாச்
சமயங்களையும் மணிமேகலை கேட்டு; நன்று அல ஆயினும்-இவர்கள் கூறுவன அறமல்லவாயினும்;
நான் மாறு உரைக்கிலேன் - யான் அவர்களை மறுத்து மாறு கூறேன் என நினைப்பவள்;
பிறந்த முற்பிறப்பை எய்தப் பெறுதலின்-பிறந்து கழித்த முற்பிறப்புநிகழ்ச்சியைத்
தான் அறிந்திருத்தலால்; அறிந்தோர் உண்டோ என்று - முற்பிறப்பை அறிந்தவர்கள்
உண்டோ என்று பூதவாதிகூறியதை நினைந்து; நக்கிடுதலும் - நகைத்துத் தன் வரலாற்றைக்
கூறவும், தெய்வமயக்கினும் - தெய்வ மருளாலும்; கனாவுறு திறத்தினும் - கனாக்காணும்
வகையாலும்; மையலுறுவோர் - மயங்குபவர்; மனம் வேறாம் வகை-மனம் திரிந்து உரைப்பது
போலும் உரைவகையாகும் உனதுரையாதலால்; ஐயம் அன்றி இல்லை என்றலும் - இஃது
ஐயத்துக்கு இடமாவதல்லது உண்மையாகாது என்றானாக; இந்த ஞாலத்து-இந்த நிலவுலகத்தில்;
நின்தந்தைதாயரை-உனக்குத் தந்தையுந் தாயுமாகிய பெற்றோரை; அனுமானத்தாலல்லது
எவ்வகை அறிவாய் - அனுமான வளவையா லறிதலையன்றி எவ் வகையால் அறிவாய்; மெய்ப்
பொருள்கள் - மெய்ம்மையான பொருள்கள் பலவும்; மெய்யுணர்வின்றி உணர்வரிய
- உண்மை யுணர்வுக் கேதுவாகிய அனுமானமுதலிய வளவைகளாலன்றி அறிதற்கரியனவாகும்;
ஐயம் அலது இது சொல்லப்பெறாய் என காட்சியல்லாத பிற அளவைகளாற் கொள்வன.
ஐயத்துக்கிட மாவன வென்றும் காட்சியளவாற் கொள்வதொன்றே தெளிவுப் பொருளென்றும்
சொல்லாதேகொள் என்று; உள்வரிக் கோல மோடு தன்னை மறைத்த ஆண்வேடத்தோடே
நின்று; உள்ளிய பொருள் உரைத்து - தான் கருதிய பொருளை உரைத்துவிட்டு |