ஆங்கு-அவ் நகரத்தே;ஐவகைச்
சமயமும் அறிந்தனள்-இது காறும் கூறிய இவ்வைகைச் சமயங்களின் பொருள்களையும்
கேட்டாள் எ - று.
நன்று, அறம்; "வீழ்நாள்
படாஅமை நன்றாற்றின்" (குறள்; 38) என்றாற் போல. "நன்றல வாயினும் நான்மா
றுரைக்கிலேன்" என ஈண்டுக்கூறுவதுபோல அறவணவடிகள்பால் கூறுமிடத்து, "ஐவகைச் சமயமும்,
செவ்வி தன்னையின் சிந்தையின் வைத்திலேன்" (29:43-4) என மணிமேகலை கூறுவது
காண்க. முற்பிறப்பின் வரலாற்றை யறிந்துள்ள தான் கண்ணெதிரே நிற்கவும்,
"அறிந்தோருண்டோ?" வெனப் பூதவாதி கேட்டது மணிமேகலைக்கு நகையை விளைவிப்ப,
அதுகண்ட பூதவாதி நகைத்ததற்குக் காரணம் வினவுவதும், மணிமேகலை முற்பிறப் புணர்ந்த
செய்தி கூறுவதும் நகை யேதுவாகப் பிறந்தசொல்லாட்டாதலின், சொற் பல்காமைப்
பொர்ட்டு "நக்கிடுதலும்" என்றதனாற் பெறவைத்தார். தெய்வ மயக்கும் கனவும்
உண்மையல்லவென்னுங் கருத்தால், "ஐயமன்றியில்லை" யென்றான்; "கடவுளாயினுமாக,
மடவை மன்ற வாழிக முருகே" என்பதனால் தெய்வ மயக்கும், "கன விற் கண்டது நனவின்
எய்துதல், தேவர்க் காயினு மிசைதல் செல்லாது" என்பதனால் கனவுநிலையும் உணரப்படும்.
மெய்யுணர்வென்பது சத்திய ஞானமென்றும், மெய்ப்பொருளென்பன பாரமார்த்திக
தத்துவ மென்றும் கூறுப. மணிமேகலை ஆண்வேடந் தாங்கி நிற்றலின் "உள் வரிக்கோல"
மென்றார். "உள்வரி யென்ப துணர்த்துங் காலை, மண்டல மாக்கள் பிறிதோ ருருவம்,
கொண்டுங் கொள்ளாது மாடுதற் குரித்தே" (சிலப். 8: 89 அடி. மேற்) என்பது
காண்க.
அளவை முதல் வேதவாத மீறாகியவற்றை
வைதிகவாதமென வொன்றாகவும், ஆசீவகவாதம் நிகண்டவாத மிரண்டையு மொன்றாகவும்
ஏனைச் சாங்கியம் வைசேடிகம் பூதவாத மூன்றாகவும் கொண்டு ஐவகைச் சமயமெனத்
தொகுத்து "ஐவகைச் சமயமு மறிந்தனள்" என்றார்; இனி உலகாயதம், பௌத்தம்,
சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்ற சமயங்கள் ஆறனுள்,
பௌத்த மொழிந்த ஏனையைந்தையும், இங்கே கேட்கின்றாளாதலின் "ஐவகைச் சமயமும்
அறிந்தன" ளென்றாரென்றுமாம். இவ்வகையில் அளவை வாதமும், சைவவாதமும், வைணவ
வாதமும் நையாகிகத்தும், பிரம வாதமும்மும் வேதவாதமும் மீமாஞ்சகத்தும்,
பூதவாதம் உலகாயதத்தும், அடங்கும். ஆசீவகவாதமும் நிகண்டவாதமும் ஒன்றாய்
இவ்வைந்தனுள் அடங்காவாயினும் வழக்காற்றுச் சிறப்புப்பற்றி ஐவகைச் சமயமெனத்
தொகுத்தெடுத் தோதினாரெனக் கோடலுமாம். "ஆற்றுளிக் கிளந்த வறுவகைச்
சமயமும்" (பெருங். 1. 36. 242) என்று கொங்கு வேளிர் கூறுதல் காண்க.
இக்கருத்தே பற்றி, சைனமொழிந்த ஏனைய சமயங்களை, "ஐவகைச் சமயமு மறந்தோற்
றனவென" (பெருங் 1. 36. 249) |