பக்கம் எண் :

பக்கம் எண் :464

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் பக்க காதை

தேவனின் அருளறத்தினைப் புரியுந் தகுதியுடையேனாகலின், மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து - இல்வாழ்க்கையைப் பொய்யென வறிந்து, செல்வமும் யாக்கையும் தினைத்தனையாயினும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே - பொருளும் உடலும் தினையளவேனும் நிலைபெறாதன என்பதனைத் தெளிவாக உணர்ந்து, மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன் - மாறுபடாத நல்லறத்தினையுடைய பெருந்தவஞ் செய்யலானேன்; புரிந்த யான் இப்பூங்கொடிப் பெயர்ப்படூஉம் திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய்-அங்ஙனம் தவமேற்கொண்ட யான் அழகியவஞ்கொடியின் பெயரினையுடைய இவ்வழகு மிக்க நகரத்தினை அடைந்த காரணத்தைக் கேட்பாயாக;

கோவனையும் கண்ணகியையும் "நின் தாதையும் தாயும்" என்றான். முற்பிறப்பிற் செய்த தீவினைப் பயனாக இப்பிறப்பில் மதுரையில் கோவலனும் கண்ணகியும் துன்புற்றாரென்பான், "செய்த தீவினையின் துன்புற" என்றும் அவர் துன்புறுங் காலம் மதுரை தீக்கிரையாதற்கு உரிய சாபம் பயன் விளைக்குங் காலமாதலின், "செழுநகர் கேடுற" என்றும் கூறினான். புத்தனைச் சுகதனென்ப. அவனுரைத்த அருளறம் அன்பறத்தின் காரியமாகதல் பற்றி, "அன்புகொள் அறம்" என்றார். புத்தவறங்களை "மலையாவற" மென்றது எத்திறத்தோரும் தவறென மறுத்தற் காகானை பற்றி, எல்லா வுயிர்க்கும் அன்பு செய்ய வேண்டுமென்ற அறம் எம்மதத்தோர்க்கும் சம்மதமானதென்பதை, "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி, தின்னுயிர் நீக்கும் வினை "(குறள் 327) எனத் திருவள்ளுவர் கூறவது காண்க. உயரிய நாகரிகத்திற்கேற்ற கூறுகளெல்லாம் குற்றமறப் பொருந்திய நகரமென்றற்குத் "திருந்திய நன்னக" ரென்றான்.

103--6.  குட்டுவர் பெருந்தகை - சூட்ட நாட்டவர்க்குப் பெரிய தகுதியடைந்த தலைவனும், விடர்ச்சிலை பொறித்த வேந்தன் - மலை முடியுலுள்ள சரிவிலே தன் விற்பொறியைய் பொறித்த வேந்தனுமாகிய; குடக்கோச் சேரலன்-குடக்கோச் சேரலாதன் என்பான்; முன் நாள் - முன்பொரு காலத்தே; துப்படு செவ்வாய்த் துடியிடையாரொடு-பவளம் போற் சிவந்த வாயும் துடிபோலு மிடையுமுடைய உரிமை மகளிருடன் போந்து; இப்பொழில் புகுந்து-இச் சோலையை யடைந்து; இனிதிருந்த எல்லையுள் - இன்ப நுகர்ந் திருந்த போழ்து;

குட்டுவர் - குட்ட நாட்டவர்; "பல்குட்டுவர் வெல்கோவே" (பத்- மதுரைக் 105) என்பது போல. மிக்க தகுதியுடையாரன்றிப் பிறர் தலைவராதல் கூடாமை தோன்ற, "பெருந்தகை" யென்றார். விடர்-மலை முடியிலுள்ள சரிவு; மலை முடியிடையுள்ள பிளவாய் மக்கள் வழங்கும் வழியைச் சார்ந்ததுமாம்; நவிரமலைப் பிளவில் பல்லவர் தம் வெற்றியைக்