என்னும் தெய்வக் கடிஞையுடன், தங்காது மாமழைபோல் இப்பதித் தருமத வனத்தே
வந்து தோன்றினள் - இந்நகரத்தின்கணுள்ள தருமத வனத்தில் பெருமுகில் போல
வந்துதோன்றினள் என மொழிய;
கஞ்சுகன் சட்டையிட்ட அரச
சேவகன், காவலன், இளங்கிள்ளி, குணவதம், இதனைக் குணவிரதம் என்ப; இச்சொல்
சமணூல்களிற் பயில வழங்குவது. பௌத்த நூல்கள், தூதகுணம் என்றும் அது பன்னிருவகை
விரதங்களையுடையதென்றும் கூறுதலின், அது குறித்து, ''''குணவதம்'''' என்றார். அவை
பஞ்சகுலிகம், திரிசிவரிகம், நாமாதிகம், வைந்தபாதிகம், ஏகாசநிகம், கலுபச்சத்
பத்திகம், ஆரணியகம், விருக்க மூலிகம், அபியவாகசிகம், சமச்சானிகம், நைசாதிகம்,
யதாசமஸ்தாரிகம் எனப் பன்னிரண்டாம். இவற்றை இஷ்ட சகஸ்ர பிரக்ஞ பாரமிதை
முதலிய பௌத்த நூல்களிற் கண்டுகொள்க மழைமுகில் மலை முதலிய வற்றால் தடைப்பட்டுத்
தங்கி யொழிவதுபோல தங்காது நேரே தான் குறித்தவிடம் போதருதலால் ''''தங்காது''''
என்றும், மழைவர உயிர்கள் தளிர்த்தல்போல் இவள் வரவால் மக்கள் பசி நீங்கி
இன்பம் பெறுமாறு தோன்ற ''''மாமழைபோல் வந்து தோன்றினள்'''' என்றும், வந்து
தங்கியிருக்குமிடந்தானும் இது வென்றற்கு ''''தருமதவனத்தே'''' யென்றுங் கூறினான்.
சென்று காண்பது நலம் என்பது குறிப்பு.
184-7. மன்னனும் விரும்பி மந்திரச் சுற்றமொடு -
அரசனும் அது கேட்டு ஆவலுடன் அமைச்சர் முதலாயினோர் சூழ்வர, கந்திற்பாவை கட்டுரை
எல்லாம் வாயாகின்றன வந்தித்து ஏத்தி-கந்திற்பாவை மொழிந்த பொருளுரை யாவும்
உண்மையேயாகின்றன என எண்ணி அதனை நினைத்துத் துதித்து, ஆய்வளை நல்லாள் தன்னுழைச்
சென்று - அழகிய வளையணிந்த நற்றவம் பூண்ட மணிமேகலைபாற் சென்று;
மணிமேகலையைக் காணச் செல்லும்
வேந்தன் அமைச்சர் முதலாயினாருடன் சேறல் சிறப்பாதலின், ''''மந்திரச் சுற்றமொடு''''
என்றார் ; செய்வதும் தவிர்வதும் அவ்வப்போது தெருந்துரைப்பவ ரவராதலின்.
மணிமேகலை வரவை முன்னரே கந்திற்பாவை வேந்தற் குரைத்திருத்தலின், அவன் ''''கட்டுரை
யெல்லாம் வாயாகின்று'''' என்று வியந்தான்: பன்மை யொருமை மயக்கம்.
188-91. நலத்தகை நல்லாய் செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ
கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ-நற்குண நற்செய்கைகளையுடையாய்! எனது
செங்கோலானது வளைந்ததனாலோ துறவோர் தவநெறியிற் றிறம்பியதாலோ தேன் சொரியும்
மலர் சூடிய கூந்தலையுடைய மகளிர் கற்புக் குறைந்ததனாலோ, நன்னாடு எல்லாம்
அலத்தற்காலை ஆகியது அறியேன் - நலஞ் சிறந்த
|