முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :479
Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
40
45
50
55
60
65
என்றலு மறவணன் றாளிணை யிறைஞ்சிப
பொன்றிகழ் புத்த பீடிகை போற்றுந்
தீவ திலகையு மித்திறஞ் செப்பினள்
ஆதலி னன்ன வணிநகர் மருங்கே
வேற்றுருக் கொண்டு வெவ்வே றுரைக்கும்
நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே
அவ்வுரு வென்ன வைவகைச் சமயமுஞ்
செவ்வி தன்மையிற் சிந்தையின் வைத்திலேன்
அடிகள் மெய்ப்பொரு ளருளுக வென்ன
நொடிகுவெ னங்காய் நுண்ணிதிற் கேணீ
ஆதி சினேந்திர னளவை யிரண்டே
ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச்
சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி
விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்
மற்றவை யனுமா னத்துமடை யும்மெனக்
1
காரிய காரண சாமா னியக்கருத்
தோரிற் பிழைக்கையு முண்டுபிழை யாதது
கனலிற் புகைபோற் காரியக் கருத்தே
ஏனை யளவைக ளெல்லாங் கருத்தினில்
ஆன முறைமையி னனுமான மாம்பிற
பக்க மேதுத் திட்டாந்த முபநயம்
நிகமன மென்ன வைந்துள வவற்றிற்
பக்க மிம்மலை நெருப்புடைத் தென்றல்
புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது
வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம்
உபநய மலையும் புகையுடைத் தென்றல்
நிகமனம் புகையிடைத் தேநெருப் புடைத்தெனல்
நெருப்புடைத் தல்லா தியாதொன் றதுபுகைப்
பொருத்த மின்று புனல்போ லென்றல்
2
மேய விபக்கத்து மீட்சி மொழியாய்
வைதன் மியதிட் டாந்த மாகுந்
தூய காரிய வேதுச் சுபாவம்
ஆயிற் சத்த மநித்த மென்றல்
1
காரணகாரிய சாமானியக்.
2
மேவிய பக்கத்து
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்