பக்கம் எண் :

பக்கம் எண் :478

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
 


5





10





15





20





25





30





35
வென்வேற் கிள்ளிக்கு நாகநா டாள்வோன
தன்மகள் பீலி வளைதான் பயந்த
புனிற்றிளங் குழவியைத் தீவகம் பொருந்தித்

தனிக்கலக் கம்பலச் செட்டிகைத் தரலும்
வணங்கிக் கொண்டவன் வங்க மேற்றிக்
கொணர்ந்திடு மந்நாட் கூரிரு ளியாமத்து
அடைகரைக் கணித்தா வம்பி கெடுதலும்
மரக்கலங் கெடுத்தோன் மைந்தனைக் காணாது

அரைசற் குணர்த்தலு மவனயர் வுற்று
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத்
தன்விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்
நின்னுயிர்த் தந்தை நெடுங்குலத் துதித்த
மன்னுயிர் முதல்வன் மகர வேலையுள்

முன்னிய வங்க முங்கிக் கேடுறப்
பொன்னி னூசி பசுங்கம் பளத்துத்
துன்னிய தென்னத் தொடுகட லுழந்துழி
எழுநா ளெள்லை யிடுக்கண்வந் தெய்தா
வழுவாச் சீலம் வாய்மையிற் கொண்ட

பான்மையிற் றனாது பாண்டு கம்பளந்
தானடுக் குற்ற தன்மை நோக்கி
ஆதி முதல்வன் போதி மூலத்து
நாத னாவோ னளிநீர்ப் பரப்பின்
எவ்வமுற் றான்றன தெய்வந் தீரெனப்

பவ்வத் தெடுத்துப் பாரமிதை முற்றவும்
அறவர சாளவு மறவாழி யுருட்டவும்
பிறவிதோ றுதவும் பெற்றய ளென்றே
சாரண ரறிந்தோர் காரணங் கூற
அந்த வுதவிக் காங்கவள் பெயரைத்

தந்தையிட் டனனினைத் தையனின் துறவியும்
அன்றே கனவி னனவென வறைந்த
மென்பூ மேனிமணி மேகலா தெய்வம்
என்பவட் கொப்ப வவனிடு சாபத்து
நகர்கடல் கொள்ளநின் றாயரும் யானும்

பகருநின் பொருட்டா லிப்பதிப் படர்ந்தனம்