பக்கம் எண் :

பக்கம் எண் :481

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை


105





110





115





120





125





130





135



நாய்வா லில்லாக் கழுதையின் பிடரின
நரிவாலு மிலையாக் காணப் பட்ட

அதனையே கொண்டு பிறிதோ ரிடத்து
நரிவாலி னானாய் வாலையனு மித்தல்
அரிதா மதனா லதுவு மாகாது
ஒட்டிய வுபநய நிகமன மிரண்டுந்
திட்டாந் தத்தி லேசென் றடங்கும்

பக்க மேதுத் திட்டாந் தங்கள்
ஒக்க நல்லவுந் தீயவு முளவதில்
வெளிப்பட் டுள்ள தன்மி யினையும்
வெளிப்பட் டுளசாத் தியதன் மத்திறம்
பிறிதின் வேறாம் வேறுபாட் டினையுந்

தன்கட் சார்த்திய நயந்தருத லுடையது
நன்கென் பக்கமென நாட்டுக வதுதான்
சத்த மநித்த நித்தமென் றொன்றைப்
பற்றி நாட்டப் படுவததில் தன்மி
சத்தஞ் சாத்திய தன்ம மாவது

நித்தா நித்த நிகழுநல் லேது
மூன்றாய்த் தோன்று மொழிந்த பக்கத்
தூன்றி நிற்றலுஞ் சபக்கத்துண் டாதலும்
விபக்கத் தின்றியே விடுதலுஞ் சபக்கஞ்
சாதிக் கிற்பொரு டன்னாற் பக்கத்

தோதிய பொதுவகை யொன்றி யிருத்தல்
சத்த வநித்தஞ் சாத்திய மாயின்
ஒத்த வநித்தங் கடாதி போலெனல்
விபக்கம் விளம்பில் யாதொன் றியாதொன்
றநித்தமல் லாதது பண்ணப் படாதது

ஆஅ காசம் போலென் றாகும்
பண்ணப் படுதலுஞ் செயலிடைத் தோன்றலும்
நண்ணிய பக்கஞ் சபக்கத் திலுமாய்
விபக்கத் தின்றி யநித்தத் தினுக்கு
மிகத்தரு மேதுவாய் விளங்கிற் றென்க

ஏதமி றிட்டாந் தம்மிரு வகைய
சாதன் மியம்வை தன்மி யம்மெனச்