140
145
150
155
160
165
170
|
சாதன் மியமெனப் படுவது தானே
அநித்தங் கடாதி யன்னுவயத் தென்கை
வைதன் மியதிட் டாந்தஞ் சாத்தியம்
எய்தா விடத்தி லேதுவு மின்மை
இத்திற நல்ல சாதனத் தொத்தன
தீய பக்கமுந் தீய வேதுவுந்
தீய வெடுத்துக் காட்டு மாவன
பக்கப் போலியு மேதுப் போலியுங்
திட்டாந்தப் போலியு மாஅ மிவற்றுட்
பக்கப் போலி யொன்பது வகைப்படும்
பிரத்தி யக்க விருத்த மனுமான
விருத்தஞ் சுவசன விருத்த முலோக
விருத்த மாகம விருத்த மப்பிர
சித்த விசேடண மப்பிர சித்த
விசேடிய மப்பிர சித்த வுபயம்
அப்பிர சித்த சம்பந் தம்மென
எண்ணிய விவற்றுட் பிரத்தியக்க விருத்தங்
கண்ணிய காட்சி மாறுகொள லாகுஞ்
சத்தஞ் செவிக்குப் புலனன் றென்னல்
மற்றனு மான விருத்த மாவது
கருத்தள வையைமா றாகக் கூறல்
அநித்தியக் கடத்தை நித்திய மென்றல்
சுவசன விருத்தந்தன் சொன்மாறி யியம்பல்
என்தாய் மலடி யென்றே யியம்பல்
உலக விருத்த முலகின்மா றாமுரை
இலகுமதி சந்திர னல்ல வென்றல்
ஆகம விருத்தந்தன் நூன்மா றறைதல்
அநித்த வாதியா யுள்ளவை சேடிகன்
அநித்தி யத்தைநித் தியமென நுவறல்
அப்பிர சித்த விசேடண மாவது
தத்த மெதிரிக்குச் சாத்தியந் தெரியாமை
பௌத்தன் மாறாய் நின்றசாங் கியனைக்
குறித்துச் சத்தம் விநாசி யென்றால்
அவனவி நாச வாதி யாதலிற்
|