175
180
185
190
195
200
205
|
சாத்திய விநாசமப் பிரசித்த மாகும
அப்பிர சித்த விசேடிய மாவ
தெதிரிக்குத் தன்மி பிரசித்த மின்றி
யிருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
பௌத்தனைக் குறித்தான் மாச்சை தனியவான
என்றா லவன நான்ம வாதி
ஆதலிற் றன்மி யப்பிர சித்தம்
அப்பிர சித்த வுபய மாவது
மாறா னோற்குத் தன்மி சாத்தியம
ஏறா தப்பிர சித்தமா யிருத்தல்
பகர்வை சேடிகன் பௌத்தனைக் குறித்துச்
சுகமுத லியதொகைப் பொருட்டுக் காரணம்
ஆன்மா வென்றாற் சுகமுமான் மாவுந்
தாமிசை யாமையி லப்பிரசித் தோபயம்
அப்பிர சித்த சம்பந்த மாவ
தெதிரிக் கிசைந்த பொருள்சா தித்தல்
மாறாம் பௌத்தற்குச் சத்த வநித்தங்
கூறி லவன்ன் கொள்கையஃ தாகலில்
வேறு சாதிக்க வேண்டா தாகும்
ஏதுப் போலி யோதின்மூன் றாகும்
அசித்த மநைகாந் திகம்விருத் தம்மென
உபயா சித்த மன்னியதரா சித்தஞ்
சித்தா சித்த மாசிரயா சித்தம்
எனநான் கசித்த முபயா சித்தஞ்
சாதன வேது விருவர்க்கு மின்றிச்
சத்த மநித்தங் கட்புலத் தென்றல்
அன்னியதரா சித்த மாறாய் நின்றாற்கு
உன்னிய வேது வன்றா யொழிதல்
சத்தஞ் செயலுற லநித்த மென்னிற்
சித்த வெளிப்பா டல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக் கசித்த மாகுஞ்
சித்தா சித்த மாவது
ஏதுச் சங்கய மாய்ச்சா தித்தல்
ஆவி பனியென வையுறா நின்றே
|