275
280
285
290
295
300
305
|
விருத்தந் தன்னைத் திருத்தக விளம்பில்
தன்மச் சொரூப விபரீத சாதனந்
தன்ம விசேட விபரீத சாதனந்
தன்மிச் சொரூப விபரீத சாதனந்
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகைய தாகும் அத
தன்மச் சொரூப விபரீத சாதனஞ
சொன்ன வேதுவிற் சாத்திய தன்மத்து
உருவங் கெடுதல் சத்த நித்தம
பண்ணப் படுதலி னென்றாற் பண்ணப
படுவ தநித்தமா தலிற்பண்ணப் பட்ட
ஏதுச் சாத்திய தன்மநித் தத்தைவிட
டநித்தஞ் சாதித்த லான்விய ரீதந
தன்ம விசேட விபரீத சாதனஞ
சொன்ன வேதுச் சாத்திய தன்மந
தன்னிடை விசேடங் கெடச் சாதித்தல
கண்முத லோர்க்கு மிந்திரி யங்கள
எண்ணிற் பரார்த்தந் தொக்குநிற் றலினாற்
சயனா சனங்கள் போல வென்றால
தொக்கு நிற்றலி னென்கின்ற வேதுச
சயனா சனத்தின் பராரத்தம்போற் கண்முதல
இந்தியங் களையும் பரார்த்தத்திற் சாதித்துச
சயனா சனவா னைப்போ லாகிக
கண்முத லிந்தியத் துக்கும் பரனாய்ச
சாதிக் கிறநிர் அவயவமா யுள்ள
ஆன்மா வைச்சா வயவ மாகச
சாதித் துச்சாத் தியதன் மத்தின
விசேடங் கெடுத்த லின்விப ரீதத
தன்மிச் சொரூப விபரீத சாதனந
தன்மி யுடைய சொரூபாத் திரத்தினை
ஏதுத் தானே விபரீதப் படுத்தல
பாவந் திரவியங் கன்ம மன்று
குணமு மன்றெத் திரவிய மாமெக
குணகன் மத்துண் மையின்வே றாதலாற
|