பக்கம் எண் :

பக்கம் எண் :494

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
 
  பாரமிதை முற்றவும் - கரை சேரவும், உதவும் பெற்றியன்-உதவிய செய்கையுடையளாவாள், என்று - என, அறிந்தோர் சாரணர் - அந்நிகழ்ச்சியை யறிந்த சாரணர் வந்து, காரணம் கூற - நினக்கு மணிமேகலை யென்ற பெயர் வைத்தற்குரிய காரணமிது வென்று கூறவே எ - று.

ஏழு நாள் வரையிற் கடலிடை யுழந்தவன் உயிர் இழக்கும் நிலை யெய்திய செய்தியை "இடுக்கண் வந்தெய்தா" என்று குறித்தார். அக்காலமே இந்திரன் இருக்கும் பாண்டு கம்பளம் அசைந்து அவற்கு இவனுறுந் துன்பத்தை யறிவிக்குங் காலம். உலகத்தில் அறவோர் அறச்செயலின் மிகுதியையும் அவர்க்குற்ற கெடுதியையும் பாண்டு கம்பளம் அசைந்து அவ்விந்திரற் கறிவிக்குமென்பது புத்தர் சமணர்களின் கொள்கை. உடனே இந்திரன் அருகு நின்ற மணிமேகலா தெய்வத்தை நோக்கி, "நீ சென்று அவன் இறப்புத் துன்பத்தைப் போக்குக" வென்று பணிப்பவன். அவன் இயல்பை விரியக் கூறுங் கால மன்மையின் சுருக்கமாக, "ஆதி முதல்வன் போதி மூலத்து நாதனாவோன்" என்று அறிவுறுத்தி, "நளிநீர்ப் பரப்பி னெவ்வ முற்றான்றன் எவ்வந்தீர்" என்று பணித்தான். நாதனாவோரைப் போதிசத்துவர் என்ப- போதி - உண்மை ஞானம்; சத்துவரென்பது பாலி மொழியடியாக வந்து வீரனென்னும் பொருள் படுவது. எனவே, போதி சத்துவ ரென்பது ஞானமே வடிவாக முயலும் சான்றோ ரென்பதாம். நாதனாவோ னென்பதும் இக்கருத்தையே வற்புறுத்துமாறு காண்க. இனி மணிமேகலா தெய்வத்தின் இயல்பினை, அறவரசாளவும் அறவாழியுருளவும் மக்கட்குதவும் மாண்புடையளென்று கூறினான். உதவும் பெற்றியள் என்பதை "பாரமிதை முற்றவும்" என்புழியும் கூட்டுக. பாரமிதை - கரை; இதனின் வேறாக உயிர்நிலை யென்றும் சால்பென்றும் பொருள் கூறுதலுமுண்டு. "நின்னுயிர்த் தந்தை" யென்பது முதல் "பிறவி தோறுதவும் பெற்றியள்" என்பது வரை, சாரணர் கோவலற் குரைத்த கூற்றினைக் கொண்டு கூறியது.

30--7.
அந்த உதவிக்கு - அந்த வுதவி குறித்து, ஆங்கு - நினக்குப் பெயரிடும் நாளில், அவள் பெயரை - அம்மணிமேகலையின் பெயரையே, நினைத் தந்தை இட்டனன் - உனக்கு உன் தந்தையாகிய கோவலன் இட்டான்; தையல் நின் துறவியும் - அவன் மகளாகிய உனது துறவினையும்; அன்றே கனவின் நனவென அறைந்த-அன்றிரவே அவன் கனவிற் றோன்றி நனவிற் றெளியப் பேசுவது போலச் சொல்லிய; மென் பூமேனி மணிமேகலா தெய்வம் என்பவட்கு ஒப்ப - மெல்லிய பூப்போன்ற மேனியையுடைய அம்மணிமேகலா தெய்வமெனப்படும் அவள் கருத்துக்கேற்ப; அவன் இடு சாபத்து - அவ்விந்திரனிட்ட சாபத்தால்; நகர் கடல்கொள்ள, காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டொழியவே; நின் தாயரும் யானும் - நினக்குத் தாயாகிய மாதவியும் சுதமதியு முதலாயினாருடன