பக்கம் எண் :

பக்கம் எண் :496

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
 
  றுருக்கொண்டு - மாதவனொருவன் உருக்கொண்டு சென்று ; வெவ்வேறுரைக்கும் - ஒருவரினொருவர் வேறுபட்டுச் சொல்லும்; நூற்றுறைச் சமய நுண் பொருள் கேட்டு - நூல் நெறியாக வந்த நுண்ணிய சமயக் பொருளைக் கேட்டு; அவ்வுரு என்ன - யான் மேற்கொண்டிருந்த எனக்கொவ்வாத உருவம்போல ; ஐவகைச் சமயமும் - ஐந்து வகைச் சமயத்து நுண் பொருள்கள் ; செவ்வி தன்மையின் சிந்தையில் வைத்திலேன்-எனக்குச் செம்மையுடைய வாகத் தோன்றாமையின் மனத்துட் கொள்ளா தொழிந்தேன் ; அடிகள்-அடிகளே; மெய்ப்பொருள் அருளுக-உண்மைப் பொருளையடியேனுக்கு உரைத்தருளுவீராக ; என்ன - என்று வேண்டி நின்றாளாக எ - று.

அறவணன் கருத்தை யறிந்து கொண்டமையின். மணிமேகலை, நகர்க்குற்ற அழிவினைத் தான்முன்பே அறிந்திருந்த செய்தியையுரைத்தாள். ஆதலால் என்பது முதலாயின எஞ்சி நின்றன. ஆதலின் அது பற்றிய பேச்சு வேண்டா வென்றலும், தன் கருத்தினைச் சட்டென வெளியிடுதலும் சீலமன்மையின், ''''ஆதலின்'''' என வொழிந்தா ளென்று மாம். வஞ்சி நகரும் காவிரிப்பூம்பட்டிடனம் போல எல்லா நலங்களும் நிறைந்திருந்தமை தோன்ற, ''''அன்ன அணிநகர்'''' என்றாள். தான் வேற்றுருக்கொண்ட காரணம் கூறிற்றிலன், ''''இளையள் வளைய ளென் றுனக் கியாவரும், விளைபொரு ளுரையார்" (26;68-9) எனக் கண்ணகி யுரைத்த காரணம் அறவணன் இயல்பாகவே யறிந்தவ னென்று. ஒருவரோ டொருவர் ஒவ்வாமலுரைத்தலின், ''''வெவ்வேறுரைக்கும்'''' என்றும், ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நூலைப் பின்பற்றி நிலவுதலால், ''''நூற் றுறைச் சமய'''' மென்றும் கூறினாள். தான் காஞ்சிமாநக ரடைந்து அறவணன் முதலாயினாரைக்க கண்ட பின்பே அவ்வேற்றுருவைக் களைந்து உண்மையுருவொடு நின்றமையின், ''''அவ்வுரு'''' வெனச் சுட்டியும், தனக்கு ஒவ்வாமை தோன்ற, அதனையுவமித்து முரைத்தாள், செவ்விது என்பதனை ஒவ்வொரு சமய நுண்பொருட்டு மேற்றுக. இனி அவ்வுருவை வையாமை போல இவற்றையும் வைத்திலேன் என்றுமாம். வையாமைக் கேது அவற்றால் மெய்ப்பொருளைத் தெளிய முடிய வில்லை; அதனை நீவிரே யுரைத்தல் வேண்டும் என்றற்கு, ''''அடிகள் மெய்ப்பொருள் அருளுக'''' என வேண்டினான்.
 
46--8.
நங்காய் - நங்கையே; நொடிகுவென் - நீ கேட்கும் மெய்ப் பொருளைக் கேட்டுத் தெளிதற்குரிய நெறியைச் சொல்லுவேன் ; நீ நுண்ணிதின் கேள் - நீ அறிவா னுணுகிக் கேட்பாயாக; ஆதி சினேந்திரன் - ஆதி புத்தன் மேற்கொண்டுரைத்த, ஏதம் இல் பிரத்தியம் கருத்தளவு என்ன - குற்றமில்லாத காட்சியும் கருத்து மென்று; அவளை இரண்டே-அளவைகள் இரண்டோயாகும் எ-று. மகளிருள் அறிவாற் சிறந்து நிற்றலின், ''''நங்காய்'''' என்றும், கேட்போர் வேட்கை யறிந்தேற்ப வுரைக்குமாறு தோன்ற, ''''நொடிகுவென்''''