என்றும், சொல்லுந்திறம் பல்வேறு வகையாய்ப் பரந்து சேறலின், கேட்கும் அவள்,
கேட்கப்படும் பொருளை நுணுகியறியும் மனவொருமை யுடையளாதல் வேண்டுமென்பான்,
''''நுண்ணிதிற் கேள்'''' என்றும் கூறினான். பௌத்தம் சினேந்திரனாற் கூறப்பட்டதென்பது
முன்பே கூறப்பட்டதாயினும் ஈண்டுக் கூற்றுநிகழ்த்துவோன் வேறாதல்பற்றி, ''''ஆதி
சினேந்திரன்'''' என்றான். சினேந்திரர் பலராதல்பற்றி, ஆதிசினேந்திரனெனத்
தெரித்து மொழிந்தான். காட்சியைப் பிரத்தியக்ஷமென்றும் கருத்தை அனுமானமென்றும்
கூறுபவாதலின், அவற்றைப் பிரத்தியமெனச் சிதைத்தும், கருத்தளவையென மொழிபெயர்த்தும்
கூறினான். காட்சி காண்டல் என்பன சவிகற்பக்காட்சிக்கும் பொது வாதலால்,
பிரத்தியம் ''''சுட்டுணர்'''' வாய் வேறுபடுவதுபற்றி மொழி பெயர்க்கா தொழிந்தாரென
வுணர்க. ஏதமில் என்பது கருத்தள வோடும் இயையும்; எனவே, ஏதமில் பிரத்தியம்.
ஏதமில் கருத்து என அளவை இரண்டாதல் பெற்றாம். பிரத்தியக்கத்துக்குரிய குற்றம்,
''சுட்டல் திரிதல் கவர்கோடல்'''' என்றும், ''''சுட்டுணர் வொடுதிரி யக்கோட
லையந் தேராது தெளிதல் கண்டுணராமை'''' என்றும் கூறிய வாற்றா லறிக. கருத்தளவைக்குரிய
குற்றங்களைப் பின்னர்ப் ''''பக்கப்போலியு மேதுப் போலியுந் திட்டாந்தப்
போலியுமாம்'''' என வகுத்துக் கூறுப. மெய்யுணர்வுப் பேறு நேர்முகமாகவும் வழிமுகமக்கவும்
நிகழ்த்தலின், பௌத்தர்கள் நேர்முகப் பேற்றைப் பிரத்திய மென்றும், வழி
முகத்தைக் கருத்தென்றும் கொண்டு ஆராய்ச்சி செய்வதுபற்றி ''அளவையிரண்டே''''
யென்றார்; ஏகாரம்: தோற்றம்; ஏனைப் பத்தும் எட்டும் ஆறும் என்றவற்றுள்,
இரண்டை வாங்கிகொண்டதாகக் கொள்வார்க்குப் பிரிநிலையுமாம்.
49--51.
சுட்டுணர்வை - ஒரு
பொருளின் பொருண்மை மாத்திரம் கண்டுணரும் உணர்வை; பிரத்தியக்கம் எனச்
சொலி - காட்சியளவை யென்று மேற்கொண்டு; நாம சாதி குணச் கிரியைகள் - பிறராற்
கொள்ளப்படும் பெயர் சாதி குணம் தொழில் என்பவை அனுமானத்தும் அடையும் என
-கருத்தளவைக்கும் செல்லுமென வாராய்த்து தெளிந்து; அவை விட்டனர் - அவற்றை
இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர் எ - று.
காட்சியாவது கண் முதலிய பொறிகளால்
வண்ண முதவியவற்றைப் பற்றிக் காண்டல் முதலியன செய்து, காணப்படும் பொருளின்
இயல்பை இடம் காலம் பொருள் ஒளிகளோடு படுத்துக் ''''கிட்டிய நாம சாதிக்
குணக் கிரியையின் அறிவதாகும்'''' என அளவை நூலார் கூறுதலின், அவரின் வேறுபடுத்தற்குச்
''''சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச் சொலி விட்டனர்'''' என்றும், நாமசாதிக்
குணக்கிரியையின் வைத்தறியும் இலக்கணம் காட்சிக்கேயன்றிக் கருத்தளவைக்குஞ்
சேறலின், அஃது அதிவியாத்தியாதல் கண்டு, ''''அவை விட்டனர்'''' என்றும் கூறினார்.
சுட்டுணர்வு பொருண்மை மாத்திரை கண்டொழிதலென்னும