பக்கம் எண் :

பக்கம் எண் :535

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

தன்மியினை அபாவமாக்குதலான் விபரீதம்" என்றுரைக்கின்றான். திரவிய முதலிய மூன்றினிடத்து உள்ள உண்மையின் வேறுபடுத்தும் பொதுவாம் உண்மை சாத்தியமாகிய பாவத்தின்கண் இல்லையென்பான், "சாத்தியத்தில்லாமையினும்" என்றும் திட்டாந்தமாகக் காட்டப்படும் சாமானிய விசேடங்களுள், சாமானியமில்வழி விசேடப்பொருளும் விசேடமில்வழிச் சாமானியப் பொருளும், இரண்டுமில்வழி எப்பொருளும் இல்லையா யொழிதலால், "சாமானிய விசேடம் போக்கிப் பிறிதொன்றில்லாமையானும்" என்றும் இதனால் தன்மியாகிய பாவத்துக்குச் சொரூபமாகிய திரவியகுண கன்மமன்மை இல்லையாய்ப் பாவமென்ப தொன்றில்லை யென்பதுபட நிற்றல்பற்றி, "பகர்ந்த தன்மியினை அபாவமாக்குதலான் விபரீத" மென்றும் கூறி மறுக்கின்றான்.

இனி, இதற்கு நியாயப்பிரவேசமுடையார் காட்டும்காரணமும்கருத்துரையும் வேறாதலை யறிந்து கொள்க. குமரிலபட்டர் இதனை, தர்மிச் சொரூப பாதையென்று பெயரிட்டு, "சமவாயம் பொருளன்று குண மன்று தொழிலுமன்று, பொருளுண்மை யுணர்வுக்கு இடனாதலால், இங்கே கடமுளது என இடமும் இடத்து நிகழ்பொருளுமாம் இயைபு போல" என்று உதாரணமும் காட்டி, ஈண்டுக் கூறிய எது சமவாயத்தைக் கெடுத்துச் சையோகத்தைச் சாதித்தலின், தன்மிச் சொரூப பாதையா 1 மென்றனர்.

319-25. தன்மி விசேட விபரீத சாதனம்-தன்மி விசேட விபரீத சாதன மெனப்படும் விருத்தப் போலியாவது; தன்மி விசேட அபாவம் சாதித்தல்-தன்மியின் சிறப்பியைபாகிய பாவத்தை அபாவமாகச் சாதிப்பது; முன்னம் காட்டப்பட்ட ஏதுவே - பாவம் திரவிய குணகன்மமன்றென முன்னர்க் காட்டியபக்கவசனத்து ஏதுவாகிய திரவிய குணகன்மத் துண்மையின் வேறாதலால் என்பதே; பாவ மாகின்றது-பாவமானது; கருத்தாவுடைய கிரியையும் குணமுமாம் அதனை - கருத்தாவாகிய வாதியாற் கொள்ளப்படாத தொழிலுங் குணமுமாம் என்பதைச் சாதித்து; விபரீ தமாக்கியதாதலால்-அவ்வாதி யெடுத்தோதிய கருத்துக்கு மறுதலை முடிபைப் பயந்தமையால்; தன்மி விசேடம் கெடுத்தது - தன்மியின் சிறப்பியைபைக் கெடுத்தது எ - று.

தன்மியையும் அதன் தன்மத்தையுங் கொண்டு, உய்த்துணரப்படும் தன்மியின் சிறப்பியைபு "தன்மி விசேட"மென வறிக. பாவமாகிய தன்மி, திரவியகுண கன்மமன்றெனவே, திரவியகுண கன்ம மன்மை தன்மியின் விசேடமாயிற்று. முன்னங் காட்டப்பட்ட ஏது தன்மிச் சொரூப விபரீத சாதனமாய்கெட்டமையின், பாவமானது திரவியகுண கன்மமாம் என்றாகிப் பாவத்தின் விசேடத்தைக் கெடுத்தலின், "பாவமாகின்றது கிரியையும் குணமுமாமதனைச் சாதித்து விபரீதமாக்கியது"


1 சுலோக. வார்த். அனுமான, 100-101.