என்றார். இதனால் தன்மியின் விசேடம் கெடுவது பயனாயினமையின், "தன்மி விசேடம்
கெடுத்து" என்றார். பக்கவசனம் கூறிய வைசேடிகனாகிய வாதியைக் "கருத்தா" வென்றும்,
அவன் மேற்கொள்ளாத கருத்தை அவன் கூறிய ஏதுவே எய்துவித்தலின் "உடைய" என்றும்
கூறினார். உடைய என்றது எதிர்மறைக் குறிப்பு. சாத்தனென்பான் என்ற்பாலதைச்
சாத்தினென்கின்றவன் என்பதுபோல, பாவமாவதெனற் பாலது "பாவமாகின்ற" தெனப்பட்டது.
பாவமாகின்றது கிரியையுங் குணமுமாமது என்பது எழுவாயும் பயனிலையுமா யியைந்து ஒரு
சொன்னீர்மைப்பட்டு அன்சாரியையும்
ஐயுருபுமேற்று விபரீதமாக்கிய தென்பதனோடு முடிந்தது.
இனி,
தன்மிச் சொரூப விபரீத சாதனத்துக்குக் காட்டிய பக்க வசனமும் எதுவுமே கொண்டு,
தன்மி விசேட விபரீதசாதனத்தை இம் மணிமேகலை யாசிரியர் விளக்கியதுபோலவே,
நியாயப் பிரவேச முடையாரும் விளக்குகின்றார். தன்மி விசேட பாதையெனக்
கூறி மேற் கொள்ளும் குமரிலபட்டரும், இவ்வாறே தன்மிச் சொரூப பாதைக்குக்
கூறிய வேதுவையே கொண்டு பொருள்களின் பல்வகை இயைபுகட்கு உண்மை காண்கின்றார்.
1சிவநெறிப்
பிரகாச வுரைகாரர், விருத்தத்தைச் சாத்திய விபரீத வியாத்தன் என்றும்,
சாதன விபரீத வியாத்த னென்றும் இருவகைப் படுத்து, "சாத்திய விபரீத வியாத்தனாவது,
சத்தம் அநித்யமாக வேண்டும், காரியமாகையால், ஆகாசம்போல் என்னுமிடத்துக்
காரியத்துவம் என்கிற ஏதுவானது தன்னுடைய சாத்தியமான நித்தியமா யிருக்கிறதற்கு
விபரீதமான அநித்தியமா யிருக்கிறத னோடே வியாப்தமாகையால் சாத்திய விபரீதமமென்னும்
ஏத்துவா பாசன், சாதன விபரீத வியாப்தனாவது,மனம் அநித்தியமாகவேண்டும்.
சேதனமாகையால், ஆன்மாவைப்போ லென்னுமிடத்து; அநித்தியத்துவ மானது சாதனமான
சேதனத்துவத்துக்கு விபரீதமான அசேதனத் துடன் வியாப்தமாகையால் சாதன விபரீத
வியாப்தன்" என்று விளக் குவர். இவ்வாறே அவரவரும் கூறுவனவற்றை யறிந்து கொள்க.
325-8
திட்டாந்த ஆபாசங்கள்
- திட்டாந்தப் போலியென்பன; தீய எடுத்துக் காட்டாவன - குற்றமுடைய எடுத்துக்
காட்டுக்களாம், திட்டாந்தம் இருவகைப்படுமென்று முற் கூறப்பட்டன - திட்டாந்தங்கள்
இருவகையாகும் என முன்பே கூறியவற்றைக் கடைப்பிடிக்க எ - று.
தீய எடுத்துக் காட்டாவன திட்டாந்தப் போலி (143-6) என்றாராகலின், அவையே
ஈண்டும் கூறப்படுகின்றன வென்பார், "தீய எடுத்துக் காட்டாவன திட்டாந்த ஆபாசம்"
என்றார். தாமே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. திட்டாந்தம் இருவகையா மென்பதை
முன்னர், "ஏதுமில் திட்டாந்தம் இருவகைய, சாதன்மியம் வைதன்மியம்