பக்கம் எண் :

பக்கம் எண் :537

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

மென" (136-7) என்று சொல்லி முறையெ இரண்டினையும் விளக்கிச் கூறியுள்ளதை நினைப்பித்தற்கு ''முற் கூறப்பட்டன'' என்றார். திட்டாநதாபாசம் நிதரிசனாபாதம் எனவும் வழங்கும்.
328-31. இங்கண் - இவ்விடத்தே; அவற்றுள்-திட்டாந்தப்போலி வகை இரண்டனுள்; சாதன்மிய திட்டாந்த ஆபாசம் ஒதில்-சாதன் மிய திட்டாந்தப் போலிவகையைக் கூறுமிடத்து; சாதன தன்மவிகலம் ...என்ன-சாதன தன்ம விகலம் சாத்திய தன்ம விகலம் உபய தன்ம விகலம் அநந்நுவயம், விபரீதாந்துவயம் என்று; ஐந்து வகையுளாகும் -ஐந்து வகைப்படும்; வைதன்மிய திட்டாந்த ஆபாசம் - வைதன்மின் திட்டாந்தப் போலியும்; சாத்தியாவியாவிருத்தி... என்ன - சாத்தியாவியா விருத்தி யென்றும், சாதனா வியாவிருத்தி யென்றும்,உபயாவியாவிருத்தியென்றும் அவ்வெதிரேகமென்றும், விபரீத வெதிரேக மென்றும்; ஐவகைய-ஐந்துவகைப்படும் எ - று.