பக்கம் எண் :538 |
|
Manimegalai-Book Content
29.
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
|
339-48.
|
இவற்றுள்-சாதன்மிய திட்டாந்தப் போலி வகை யைந்தனுள்; சாதன தன்ம விகலமாவது-சாதன
தன்மவிகலமென்னும் திட்டாந்தப் போலியாவது; திட்டாந்தத்திற் சாதனம் குறைவது
வாதியாவான் காட்டும் திட்டாந்தத்தில் அவன் கூறும் ஏதுவாகிய சாதனம் பொருந்தா
தொழிவது; சத்தம் நித்தம் அமூர்த்த மாதலான்-சத்தம் நித்தமாகும் அமூர்த்தமாகையால்
எனப் பக்க வசனமும் எதுவும் கூறி; யாதொன்று அமூர்த்தம் அது நித்தமாதலால்-யாது
யாது அமூர்த்தம் அது நித்தமென வியாத்தி வசனம் காட்டி; பரமாணுவில் காண்புற்றது
எனில் - இதற்குத் திட்டாந்தம் பரமாணுவில் காணப்பட்டது என்று சொன்னால்
; திட்டாந்தப் பரமாணு-திட்டாந்தமாகிய பரமாணு; நித்தத்தோடு மூர்த்தமாதலால்
- நித்தத்துவமும் மூர்த்தமாம் இயல்புடையதாதலால்; சாத்திய தன்ம நித்தத்துவம்
நிரம்பி - சாதிக்கவேண்டிய தன்மமாகிய நித்தத்துவம் பொருந்தி ; சாதன தன்ம
அமூர்த்தத் துவம் குறையும்-ஏதுவிற் கூறிய தன்மமாகிய அமூர்த்தத் தன்மை பொருந்திற்றில்லையாம்
ஆதலால் இத் திட்டாந்தம் சாதன தன்ம விகலத் திட்டாந்தப் போலியாயிற்று
எ - று.
|
இம் மணிமேகலை
யாசிரியர் சாதன தன்ம விகலமென்றராக, நியாயப் பிரவேசமுடையார் சாதன தர்மாசித்தம்
என்றனர்; இவர்கட்குப் பிற்போந்த் தருமகீர்த்தியார், சாதன தன்ம விகலமென
மணிமேகலை யாசிரியர் கூறியாங்குக் கூறுகின்றார். விகலமெனினும் அசித்தமெனினும்
ஒன்றே. குறைத்தல், இன்மைப் பொருட்டு. குறைவிற்கு எல்லை இன்மையாதலின், இல்லாமை
யெய்தும் நிலையைக் குறைதலென்றார். ஏனையிடத்தும் இதுவே கூறிக்கொள்க. "திட்டாந்தத்திற்
சாதனம் குறைவ" தென்றது சாதனதன்ம விகலத்துக்கு இலக்கணம் கூறிற்று. "சத்தம்
நித்தம்" என்ற மேற்கோளை "அமூர்த்த மாதலான்" என்ற ஏதுவால் வலியுறுத்துவார்,
அதன் வியாத்தியை எடுத்தோகிக் காட்டுதலின், "யாதொன்று யாதொன்று அமூர்த்தம்
அது நித்தம்" என்றார். இவ்வியாத்தியைச் சபக்கத்தினும்காட்டவேண்டிப் "பரமாணுப்போல"
எனத் திட்டாந்தம் காட்டியவழி, அப் பரமாணு நித்தமாந் தன்மமும் மூர்த்தமாமியல்பும்உடைத்தாதலால்,
சாதன தன்மமாகிய நித்தத்துவம் பொருந்தி நிற்ப, அமூர்த்தத்துவம் பொருந்தாமையால்,
சாதனமாகிய ஏதுவின் ''தன்மமாகிய அமூர்த்தத்துவம் பொருந்தாத திட்டாந்தப்
போலியாயிற்று. ஆதலால் என்பது முதலாயின குறிப்பெச்சம்.
|
349-58.
|
சாத்திய தன்ம விகலமாவது-சாத்திய தன்ம விகலமென்னுந் திட்டாந்தப் போலியாவது;
காட்டப்பட்ட திட்டாந்தத்தில்- வாதியாவான் தான் கூறிய ஏதுவோடு கூடியபக்க
வசனத்தைநாட்டுவதற்குக் காட்டிய திட்டாந்தத்தின்கண்; சாத்தியதன்மம் குறைவு.
படுதல்-சாத்தியமாகிய தன்மியின் தன்மம் இல்லையாய் விடுதல
|
|
|
|
|