பக்கம் எண் :539 |
|
Manimegalai-Book Content
29.
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
|
|
சத்தம் நித்தம் அமூர்த்தமாதலால்-சத்தம் நித்தமாம் அமூர்த்தமாத வினாலே
என்று பக்கவசனமும் ஏதுவும்; யாதொன்றும் யாதொன்று அமூர்த்தம் அதுநித்தம்-யாதுயாது
அமுர்த்தம் அதிநித்தம் என்று வியாத்தி வசனமும் கூறி, புத்திபோல் என்றால்-புத்திபோல
எனத் திட்டாந்தம் காட்டினால்; திட்டாந்தமாககக் காட்டப்பட்ட புத்தி -
வாதியால் திட்டாந்தமாக எடுத்துக்காட்டப்பட்ட புத்தியானது ; அமூர்த்தமாகி
நின்றே-அமூர்த்தத்துவ முடையதாயினும்; சாதன அமூர்த்தத்துவம் நிரம்பி - ஏதுவின்
கண்ணுள்ள அமூர்த்தத்துவமாகிய தன்மம் பொருந்த ; சாத்திய நித்தத்துவம் குறையும்-பக்க
தன்மியின் தன்மமாகிய நித்தத்துவம் பொருந்தா தொழிகிறது ; ஆதலால் இது சாத்திய
தன்ம விகலமாயிற்று எ - று.
|
பக்க
வசனத்துக் காட்டப்படும் தன்மியின் தன்மமுடைமையைச் சாதித்தற்குத் திட்டாந்தம்
காட்டுமிடத்து, அது சபக்கமாதலின் அதன் பால் சாதித்தற்குரிய தன்மத்துக்கு
வியாத்தியிலே யாயின் குற்றமா மென்று கூறலின், "சாத்திய தன்மம் குறைவுபடுதல்" என்று குறித்தார். யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் என எதுவுக்கு வியாத்தி
வசனம் கூறினும், அதனுட் டுணிபொருளாகக் கூறப்படும் நித்திய தன்மம் திட்டாந்தமாகிய
புத்தயின்கண் இனமையின் இது திட்டாந்தப் போலியாயிற்றென வறிக. இனி உமாபதி
சிவாச்சாரியார், இதற்கு, "ஆத்மா நித்தியம், விபு வாகையால், ஆகாசம்போல"
என்று கூறி, ஆகாசம் சத்த தன்மாத்திரையின் காரியமாகையால் நித்தியத்துவமுடைய
தன்மையின் சாத்திய விகலமாயிற்று
1
எனபர். இதற்குச்
2
சிவநெறிப்
பிரகாசவுரைகாரர். "காரியம் காரியமல்லவென்று சந்தேகப்பட்டிருக்கிற வத்தவானது
காரியமாகவேண்டும். பிரத்தியட்சமாகையால், ஆன் மாவைப்போ வென்னுமிடத்துச்
சாத்தியமாயிருக்கிற காரியத்துவம் ஆன்மாவினிடத்தில் இல்லாதிருக்கையால்
சாத்தியமான இதனிலும் திட்டாந்தாபாசம்" என்று கூறுவர்.
|
359-63.
|
உபய தன்ம விகலமாவது-உபய
தன்ம விகலமென்னும் திட்டாந்தப் போலியாவது; காட்டப்பட்ட திட்டாந்தத்திலே
வாதியாற் காட்டப்பட்ட திட்டாந்தத்தின்கண்; சாத்திய சாதனம் இரண்டும்
குறைதல்-சாத்தியத்தின் தன்மமும் சாதனமாகிய ஏதுவின் தன்மமும் என்ற இரண்டும்
வியாத்தியில்லா தொழிவதாம் ; அன்றியும் - மேலும்; அது - அவ் வுபயதன்ம
விகலம் ; சன்னும் அசன்னும் என்று இருவகையாம் - சன்னாவுள்ள உபய தன்ம விகலம்
அசன்னாவுள்ள வுபய தன்ம விகலம் என்று இருவகைத்தாகும் எ - று.
|
உபய
தன்ம விகலம் இவ்வாறு இருவகையாகப் பிறராற் கூறப்பட வில்லை. இம் மணிமேகலை
யாசிரியர் போல நியாயப்பிரவேச முடை
1
பௌட்க, பாடி. (897-898. உரை.)
2
28 உரை.
|
|
|
|
|