பக்கம் எண் :

பக்கம் எண் :540

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

யாரும் சன்னும் அசன்னுமாக இருவகையாகவே கூறியுள்ளார். சன் - உள்ளது; அசன் - இல்லது. இவ்வாறு இருவகையாகக் கொண்டதே யன்றி, உபய தன்ம விகலத்தை உபயாசித்தமென்று வழங்குவத்றகேற்ப இவ்விரண்டினையும் முறையே வித்யமானோபயாசித்த மென்றும் அவித்யமானோபயாசித்தம் என்றும் கூறுவர்.
 
363--72. இவற்றுள் சன்னாவுள உபய தன்ம விகலமாவது-இரண்டாக வகுக்கப்பட்ட இவற்றுள் சன்னாகவுள்ள உபய தன்ம விகலமென்னும் திட்டாந்தப் போலியாவது; உள்ள பொருட்கண்-திட்டாந்தமாகக் காட்டப்பட்ட உள்பொருளின்கண்ணே ; சாத்திய சாதனம் கொள்ளும் இரண்டும்-சாத்திய தன்மமும் சாதன தன்மமுமாகிய இரண்டும்; குறையக் காட்டுதல்-பொருந்தா தொழிவது : சத்தம் நித்தம் - சத்தம் நித்தமென்று பக்க வசனமும்; அமூர்த்த மாதலான் - அமூர்த்தமாதலாலெனப் பக்க தன்ம வசனமும் ; யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் - யாது யாது அமூர்த்தம் அது நித்தமாமென வியாத்தி வசனமும் கூறி ; கடம் போல் எனில்-குடம்போல் என உள் பொருளாகிய வொன்றைத் திட்டாந்தமாகக் கூறிய வழி ; திட்டாந்தமாகக் காட்டப்பட்ட கடம்தான் - திட்டாந்தமாகக் காட்டப்பட்டுள்ள குடந்தானும் ; உண்டாகி-உள்பொருளாய் ; சாத்தியமாய் உள நித்தத்துவமும் - சாத்திய தன்மமாகிய நித்தத்துவமும்; சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் -சாதன தன்மமாகிய அமூர்த்தத்துவமும்; குறையும்- இல்லையாம் எ - று.

"உள்ள பொருட்கண் சாத்திய சாதனம் கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்" என்றது சன்னாவுள்ள உபய தன்ம விகலத்துக்கு இலக்கணம் கூறிற்று. "காட்டுதல்" என்றாதனால், உள் பொருள் காட்டுத் திட்டாந்தப் பகுதியாதல் நன்கு பெறப்படுதலால் எடுத்தோதாராயினார். சத்தம் நித்தமென்றது சாத்தியத்தின் தன்மம் நித்தத்துவமென்பதும், அமூர்த்தமாதலால் என்றது சாதன மிது வென்பதும் யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தமென்றது. சாதன தன்மம் அமூர்த்தத்துவமென்பதும் விளக்கி நிற்றல் காண்க. உள்ள தாகியதொரு பொருளென்றற்கு, "உண்டாகி" யென்றார். குடம் அநித்தத் தன்மையும் மூர்த்தமும் (உருவம்) உடையதாதலால் திட்டாந்தப் போலியாத லறிக. உபயாசித்தமெனக் கொண்ட இத் திட்டாந்தப் போலிக்குப் பிரசத்தபாதரும் வித்யாமானோபயா சித்தமெனக் கொண்ட நியாயப் பிரவேசமுடையாரும் "கடம்போ" லென்னும் இத் திட்டாந்தத்தையே யெடுத்துக் காட்டி யுள்ளனர்.

373--84.


அசன்னாவுள்ள உபயதன்மவிகலம்-அசன்னாவுள்ள வுபய தன்மவிகல மென்னும் திட்டாந்தப் போலியாவது ; இல்லாப் பொருட்கண்-பிரிதிவாதிக்கு இல்பொருளா மென்றைக் கடாடுமிடத்து