பக்கம் எண் :

பக்கம் எண் :541

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை


அதன்கண் ; சாத்திய சாதனம் இரண்டும் குறையக் காட்டுதல்-சாத்திதன்மம் சாதன தன்மம் என்ற இரண்டும் இல்லையாகக் காட்டுவது ; சத்தம் அநித்தம்-சத்தம் அநித்தமானது எனச் சாத்திய வசனமும்; மூர்த்தமாதலான்-மூர்த்த மாகையாலெனச் சாதன வசனமும்; யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் - யாதொன்று யாதொன்று மூர்த்தம் அஃது அநித்தமென வியாத்தி வசனமும் கூறி; ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து - ஆகாசம் போல எனக் காட்டும் திட்டாந்தத்தின் கண்; சாத்திய தன்மமாயுள்ள அநித்தமும்-சாத்தியமாகிய சத்தத்தின் தன்மமான அநித்தத்துவமும்; சாதன தன்மமாயுள்ள மூர்த்தமும் -சாதனமாகிய ஏதுவின் தன்மமான மூர்த்தத்துவமும்; ஆகிய இரண்டும் - இருதன்மங்களும்! ஆகாசம் அசத்து என்பானுக்கு - ஆகாசமென வொன்று கிடையாது (இல்பொருள்) என்னும் வாதிக்கு; அதன்கண் இன்மையானே குறையும்-அதிட்டாந்தத்தின்கண் இல்லையா யொழியும்; உண்டென்பானுக்கு - உள்பொருளெனக் கருதும் வாதிக்கு; ஆகாசம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்- அவ்வாகாசம் நித்தத்துவமும் அமூர்த்தத்துவமும் ஆகிய விருதன் மங்களை யுடைத்தாதலால்; அவனுக்குங் குறையும்-அவற்கும் உபய தன்ம விகலமாம் எ - று.
 
"இல்லாப் பொருட்கண் சாத்திய சாதன மிரண்டுங் குறையக் காட்டுத" லென்றது அசன்னாபுள்ள வுபயதன்ம விகலத்துக்கு இலக்கணம் கூறியது. "இல்லாப் பொருள் என்றது பிரதிவாதியால் இல்லையெனக் கருதப்படுவதொரு பொருள். ஆகாசத்தை உண்டெனக் கொள்வோரும் இல்லையெனக் கருதுவோரும் வாதிகள் இருதிறத்தர்; இல்லையென்போர் பௌத்த வாதிகள். அசத்து இல்லாதது; சத்து உள்ளது; ந+சத்து என்பது அசத்தென நின்றது; நகரம் அன்மை, இனமை, மறுதலை என்ற முப்பொருண்மையுடைத்தாதலின், ஈண்டு இன்மைபற்றி அசத்தென்றதெனக் கொள்க. அசத்துப் பொருளெனச் சைவநூல்கள் கூறுவன சத்துக்கு மாறாயவற்றையென வறிக. சத்தம் அநித்தமென்ற பக்க வசனத்து அநித்தம் சாத்தியமாகிய சத்தத்தின் தன்மமாகக் கூறுதலின், "சாத்திய தன்மமாயுள்ள வநித்தமும்" என்றும், இவ்விருவகைத் தன்மங்கட்கு இடமாகிய ஆகாசம் இல்லையென்ற பௌத்த வாதிக்கு, இரண்டும் இலவாதல் தானே விளங்குதலின், "அதன்கண் இன்மையானே குறையும்" என்றும், ஆகாசத்தை யுண்டெனக் கூறும் வைசேடிகர் அது நித்தமென்றும் அமூர்த்தமென்றும் கூறுபவாதலின் "ஆகாசம் நித்தம் அமூர்த்தமாதலால் அவனுக்குங் குறையும்" என்றும் கூறினார். உம்மை: எச்சப்பொருளது.
 
385--92. அநன்னுவயமாவது - அநன்னுவயமென்னும் திட்டாந்தப் போலியாவது; சாதன சாத்தியம் தம்மின் - சாதன சாத்தியங்களினுடைய; கூட்ட மாத்திரம் சொல்லாது - அன்னுவயத்தைச்