பக்கம் எண் :

பக்கம் எண் :542

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

  சொல்லிக் காட்டாமல்; இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல் - இரண்டும் பொருந்தியுள்ள திட்டாந்தத்தை மட்டிற் காட்டி யொழிதலாம்; சத்தம் அநித்தம் - சத்தம் அநித்தமென்னும் சாத்திய வசனமும்; கிருத்தமாதலின் - பண்ணப்படுதலால் என்னும் சாதன வசனமும் சொல்லி; யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் அன்னுவயம் சொல்லாது - யதொன்று பண்ணப்படுவது அஃது அநித்தமாம் என அந்நுவய வியாத்தி வசனம் சொல்லாமல்; குடத்தின்கண்ணே கிருத்த வநித்தம் காணப்பட்ட வென்றால் - குடத்தின்கண்ணே சாதன சாத்திய தன்மங்கள் காணப்படுகின்றனவென்று சொன்னால்; அன்னுவயந் தெரியாதாகும்-உடனிகழ்ச்சியாக வியாத்தி தெரியாமையாகிய திட்டாந்தப் போலியாம் எ - று.

அன்னுவயத்தின் இல்லாமை அநன்னுவயம், அன்னுவயம், உடனிகழ்ச்சி; அஃது ஈண்டுக் கூட்டம் எனப்பட்டது. இன், தம்மின் என்பன சாரியை: ஆறனுருபு தொக்கது. சாத்திய சாதனவசன மிரண்டும் கூறித் திட்டாந்தம் கூறப்படுதலால், "கூட்ட மாத்திரம் சொல்லாதே இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல்" என்றார். கூட்டமென்ற அன்னுவயமாவது இது வென்பார், "யாதொன்று யாதொன்று கிருத்தம் அது நித்தம் எனும் அந்நுவயம்" என்றார். அஃதென்னல் வேண்டும் ஆய்தம் தொக்கது. கிருத்தம்: வடசொற்சிதைவு. கிருத்தமென்னும் சாதன தன்மமும் அநித்தமென்னும் சாத்திய தன்மமும் குடமாகிய திட்டாந்தத்திலே உள்ளன என்பான், "குடத்தின் கண்ணே கிருத்த வநித்தம் காணப்பட்ட" வென்கின்றான். "கானந் தகைப்ப செலவு" என்றாற்போல காணப்பட்ட என்பது அன்பெறாது வந்தது. அன்னுவயங் காட்டாதொழியின், காட்டப்பட்ட திட்டாந்தத்தின்கண் சாதன சாத்தியங்கட்கு வியாத்தி யுண்டென்கின்றானோ, இல்லையென்கின்றானோ என எதிரி ஐயுற்று மேலே தடை பல தொடுத்தற்கிடனாய்க் குன்றக்கூறலென்னுங் குற்றப்படுதலின், இதனைக் குற்ற மென்பராயினர்.
 
393--401.






விபரீ தான்னுவயம்-விபரீ தான்னுவயமென்னும் திட்டாந்தப் போலியாவது; வியாபகத்துடைய அன்னுவயத்தாலே - வியாபகமாயுள்ள சாத்தியப் பொருளின் தன்மத்தின் அன்னுவய வியைபு கொண்டே; வியாப்பியம் விதித்தல் - வியாப்பியமாகிய சாதன தன்மமும் பொருந்தியிருப்பதாகக் கருதிக் காட்டுவதாம்; சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின் - சத்தம் அநித்தமெனச் சாதிக்கு மாற்றால் பண்ணப்படுதலால் என ஏதுக் கூறினால்; யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என - யாதொன்று பண்ணப்படுவது அஃது அநித்தமென வியாத்தி காட்டி; வியாப்பியத்தால் வியாபகத்தைக் கருதாது - சாதன தன்மத்தின் வியாப்பியத்தைக்