பக்கம் எண் :

பக்கம் எண் :543

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

  கொண்டு சாத்திய தன்மத்தின் வியாபகத்தை அன்னுவயமாகக் கொள்ளாது; யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தமென - யாதொரு பொருள் அநித்தமோ அது பண்ணப் படுவதென; வியாபகத்தால் - சாத்திய தன்மத்தைக் கொண்டு; வியாப்பியத்தைக் கருதுதல் - சாதன தனமத்தைக் கருதிக்கொள்ளுதல் விபரீதான்னுவயமாம்; அப்படிக் கருதின் - அவ்வாறு கருதிக் கொள்ளுமிடத்து; வியாபகம் வியாப்பியத்தை யின்றியும் நிகழ்தலின்-வியாபகமாயுள்ள பொருள் வியாப்பியமாய்த் தன்கண் அடங்குவதைக் காட்டாதொழிவது முண்மையின் ; விபரீதமாம் - விபரீதமாகிய குற்றமாம் எ - று.
 
"வியாபகத்துடைய அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல்" என்றது, விபரீதான் னுவயத்தின் இலக்கணம் கூறிற்று. அன்னுவயம், கூட்டம், உடனிகழ்ச்சி, வியாத்தி யென்பன ஒரு பொருளன. நெருப்பும் புகையுமாகிய இரண்டனுள் நெருப்பில் புகையடங்கித் தோன்றுவதுபற்றி நெருப்பு வியாபகமும் புகை வியாப்பியமுமாம். ஒன்றினொன் றடங்கியுடனிகழும் பொருள்களுள் அடங்கிக் குறைவற உடனிகழ்வது வியாப்பியமென்றும் அடங்காது மற்றதை அகத்திட்டு மிக்கிருப்பது வியாபகமென்றும் வழங்கும். வியாப்பியமாகிய புகை, வியாபகமான நெருப்புண்மையைக் காட்டல் கூடுமே யன்றி, வியாபகமான நெருப்புண்மையால் புகையாகிய வியாப்பிய முண்மையைக் காட்டல் கூடாது. பழுக்கக் காய்ச்சிய இரும்பினிடத்தே நெருப்புளதாயினும் அது புகையின்றி யிருக்கக் காண்கின்றே மாதலால், வியாபகத்தின் அன்னுவயத்தால் வியாப்பியப் பொருளைத் துணிவதென்பது குற்றமாதலின், "வியாபகத்துடைய அன்னுவயத்தாலே வியாப்பியத்தை விதித்தல்" விபரீ தான்னுவயமாகிய குற்றமா மென்றார். சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனில் சாத்திய தன்மமாகிய அநித்தத்துவம் வியாபகமும் சாதன தன்மமாகிய கிருத்தத்துவம் வியாப்பியமுமாம்; புகையுண்மையாகிய வியாப்பியத்தால் நெருப்புண்மையாகிய வியாபகம் காணப்படுவது போல கிருத்தத்துவமாகிய வியாப்பியத்தால் அநித்தத்துவமாகிய வியாபகம் பெறப்படுவது கண்டு, "யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தமென வியாப்பியத்தால் வியாபகத்தைக் கருதாது" என்றார். வியாபகமாகிய நெருப்புண்மை கொண்டு வியாப்பியமாகிய புகையுண்மை துணிதல் எவ்வாறு குற்றமோ அவ்வாறே வியாபகமாகிய அநித்தத்துவமான சாத்திய தன்மத்தைக் கொண்டு, வியாப்பியமாகிய கிருத்தத்துவமான சாதன தன்மத்தைத் துணிவது குற்றமென்பார், "யாததொன்றுயாதொன்று அநித்தம் அது கிருத்தமென வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல்...விபரீதமாம்" என்றார். புகையாகிய வியாப்பியமின்றியும் நெருப்பாகிய வியாபகம் இருத்தலுண்மையின், அதனையே யேதுவாக நிறுத்தி, "வியாபகம் வியாப்பியத்தை யின்றியும் நிகழ்தலின்" என்று கூறினார். வியாப்பியமான சாதனதன்மம் தன்