பக்கம் எண் :

பக்கம் எண் :544

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

வியாத்தியால் வியாபகமான சாத்திய தன்மத்தைக் காட்டுதல் முறையேயன்றி, சாத்திய தன்மத்தைக் கொண்டு சாதன தன்மத்தைத் துணிவது மாறகொளலாகிய விபரீத மாதலால், இது விபரீதான் னுவயமாயிற்று. வியாபகம் வியாப்பிய மென்பன அவ்வவற்றிற்குரிய பொருண்மேனின்றன.

அநன்னுவயம் விபரீதான்னுவய மிரண்டினையும் பிரசத்தபாதர் அனனுகத நிதரிசனாபாசமென்றும் விபரீ தானுகத நிதரிசனாபாசமென்றும் வழங்குவர். நியாயப் பிரவேசமுடையார் இவ்விரண்டிற்கும்இங்கே கூறிய பெயர்களையே மோற்கொண்டாரேனும் அநன்னுவயத்திற் கிலக்கணங் கூறியதுபோல விபரீ தான்னுவயத்திற் கது கூறாராயினர்.

402--12. வைதன்மிய திட்டாந்தத்துச் சாத்தியா வியாவிருத்தியாவது - வைதன்மிய திட்டாந்தப் போலிவகையில் கூறப்படும் சாத்தியா வியாவிருத்தி யென்னும் திட்டாந்தப் போலியாவது ; சாதன தன்மம் மீண்டு-வைதன்மிய திட்டாந்தத்துக் கேற்ப மீளுதற்குரிய சாதன சாத்திய மிரண்டனுள் சாதன தன்மம் மீண்டு நிற்க; சாத்திய தன்மம் மீளாதொழில் - சாத்தியப் பொருளின் தன்மம் மாத்திரம் மீளாது வைதன்மிய திட்டாந்தத்தின்கண் பொருந்தி யிருப்பதாம் ; சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்- சத்தம் நித்தத்துவமுடையது அமூர்த்தத்துவமுடையதாகையால் என்று சொல்லி; யாதொன்று யாதொன்று நித்தமு மன்று அது அமூர்த்தமும் அன்று பரமாணுப்போல் எனில் - யாதொரு பொருள் நித்தமன்று அஃது அமூர்த்தமன்று என அதற்கு விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி கூறிப் பரமாணுவைப்போல என வைதன்மிய திட்டாந்தம் காட்டினால், அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட பரமாணு - அவ்வாறு வாதியாவான் வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டிய பரமாணுவானது; நித்த மாய மூர்த்த மாதலின்-நித்தமாயும் மூர்த்தமாயும் இருத்தலால்; சாதன அமூர்த்தம் மீண்டு - சாதனமாகிய அமூர்த்தத்துவத்துக்கு மீட்சியாகிய மூர்த்தத்துவம் பொருந்தி நிற்ப; சாத்திய நித்தம் மீளாதொழிதல்- சாத்திய தன்மமாகிய நித்தத்தின் மீட்சியான அநித்தத்துவம் இப்பரமாணுவின்கண் இல்லாதொழிதலால் இதுகுற்றமாயிற்று எ-று.








மீளுதல், எதிர்மறை முகத்தால் வலியுறுதல்; அஃதாவது சத்தம் நித்தம் அமூர்த்தமாதலின் என்றவழி, யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தமெனவரும் வியாத்திக்கு மறுதலையாய் யாதொன்று நித்தமல்லாதது அஃது அமூர்த்தமன்றென வியாத்தி வசனம் கூறி, குடம்போல எனத் திட்டாந்தம் காட்டி, அதன்பால் நித்தமன்மையும் அமூர்த்தமன்மையும் வெளிப்படையாதலால், அவ்வாற்றால் சாத்திய தன்மமான நித்தத்துவத்தையும் சாதன தன்மமான அமூர்த்தத்துவத்தையும் வலியுறுத்துவதாம். உடன்பாட்டாலும் எதிர்