பக்கம் எண் :545 |
|
Manimegalai-Book Content
29.
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
|
மறையாலும் பொருளுண்மை வற்புறுத்துவது நன்றாதலின், இரண்டிற்கும் முறையேயுரிய திட்டாந்தங்கள்
சாதன்மிய திட்டாந்தமெனவும் வைதன்மிய திட்டாந்த மெனவும் வழங்கலாயின. சாதன்மியம்-சாத்திய
சாதன தன்மங்களையுடையது; வைதன்மியம் - மறுதலைச் சாத்திய சாதன தன்மங்களையுடையது.
இவற்றை அன்னுவய திட்டாந்த மென்றும் வெதிரேக திட்டாந்த மென்றும் பிறரெல்லாம்
கூறுப.
|
"சத்தம்
நித்தம் அமூர்த்தத்து" என்பது சாதனத்தோடு கூடிய சாத்திய வசனம். இதன் விபக்கத்
தொடர்ச்சி மீட்சிமொழிக்குரியவை சாத்திய சாதனங்களின் மறுதலைத் தன்மிகளாதலின்,
அது ''யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தன்மன்று" என்பதனால் உரைக்கப்பட்டது.
இதனை வற்புறுத்தற்குக் காட்டும் வைதன்மிய திட்டாந்தம் "பரமாணுப்போல்" என்பது
இதன்பால் சாத்தியமாகிய சத்தத்தின் தன்மத்துக்கு மீட்சியாய் நித்தமன்மையும்,
சாதனமாகிய அமூர்த்தத்திற்கு மீட்சியாய அமூர்த்தமன்மையும் பொருந்துமாயின்,
இது குற்றமில்லாத வைதன்மிய திட்டாந்தமாம். பரமாணுவின்கண் சாதன தன்ம மீட்சியாகிய
மூர்த்தத்துவம் மீண்டு நீலைபெறுதலின், "சாதனவமூர்த்தம் மீண்டு" என்றும், சாத்தியமான
சத்ததன்மமான நித்தத்தின் மீட்சியாகிய அநித்தத்துவம் காணப்படாமையால்,
அச் சாத்திய தன்மம் மீட்சிபெறாமையை, "சாத்திய நித்தம் மீளா தொழிதல்"
என்றும் கூறினார். எனவே, பரமாணுவாகிய வைதன்மிய திட்டாந்தத்தில் சாத்திய
தன்ம மீட்சி பொருந்தாது சாதன தன்ம மீட்சியொன்றே பொருந்துதல்பற்றிக்
குற்றமாதலின், வைதன்மிய திட்டாந்தப் போலி யெனப்படுவதாயிற்று.
|
413--23.
|
சாதனா வியா
விருத்தியாவது-வைதன்மிய திட்டாந்தத்துச் சாதனா வியாவிருத்தி யென்னும் திட்டாந்தப்
போலியாவது; சாத்திய தன்மம் மீண்டு - மீளுதற்குரியவற்றுள் சாத்தியப்பொருளின்
தன்மம் மீள; சாதன தன்மம் மீதொழிதல்-சாதனமாகிய ஏதுவின் தன்மம் மீளாது
குற்றப்படுதல்; சத்தம் நித்தம்-சத்தம் நித்தத்துவமுடையதெனச் சாத்திய வசனமும்
; அமூர்த்தத்து என்றால் - அமூர்த்தத்துவமுடைந தாகையாலெனச் சாதனவசன மும்கூறி;
யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமும் அன்று - யாதொன்று நித்தமல்லாதது
அஃது அமூர்த்தமுமல்லாதது என மீட்சிக்குரிய வியாத்தி வசனம் காட்டி; கன்மம்
போல் என்றால் - கன்மம் போல எனத் திட்டாந்தம் கூறினால்; வைதன்மிய திட்டாந்தமாகக்
காட்டப்பட்ட கன்மம் - எதிர்மறை நெறிக்குரிய திட்டாந்தமாகக் காட்டிய கன்மமானது;
அமூர்த்தமாய் நின்று-அமூர்த்தத்துவ முடையதாய் நின்று; அநித்தமாதலின் - அநித்தத்துவ
முடையதாதலால்; சாத்தியமான நித்தியம் மீண்டு - சாத்திய தன்மமான நித்தத்துக்கு
மீட்சியாகிய அநித்தத்துவம
|
|
|
|
|