பக்கம் எண் :

பக்கம் எண் :597

Manimegalai-Book Content
அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
அம்பலப் பீடிகை - அம்பலமாகிய
இடம்: பொது
இடம் 13 - 107
அம்பி-நாவாய்: மரக்கலம் 29 - 9
அயர்தல் - மறத்தல் 7 - 71
அயர்த்தல் - மறத்தல் 23 - 42
அயர்ந்து - செய்து 22 - 20
அயர்ந்து - வருந்தி 20 - 87
அயாவுயிர்த்தல் - நெட்டு
யிர்ப்பு விடுதல்: நெடுமூச்சு
விடுதல் 21 - 26
அரங்கு-அவை: கூத்து நிகழும்
இடம் 4 - 6
அரங்கு - சபை 18 - 33
அரசர் உரிமைஇல்-அந்தப்
புரம் 23 - 55
அரந்தை - துயர்: துன்பம் 6 - 185
அரமியம் - நிலாமுற்றம் 12 - 47
அரவம் - ஆரவாரம்: பேரொலி 14 - 60
அரவக்கடல் - ஒலியையுடைய
கடல் 9 - 38
அரவாய் - அரத்தின்வாய்;
(அரம் - கருவிகளை அராவும்
கருவி) 7 - 73
அரற்றல் - புலம்பல் 22 - 56
அராந்தாணம் சமண்பள்ளி 5-23
அரிக்குரல் - மெல்லியகுரல் 5 - 127
அருத்தா பத்தி - பொருள்
அளவை: ஒன்றைக்கொண்டு
மற்றொன்றை அறிதல் 27 - 45
அருந்த ஏமாந்த-பிறர் உண்ண
ஆவல்கொண்ட 14 - 68
அருந்துநர் சாலை - உணவுண்ணுமிடம் 20 - 7
அருப்புக்கணை: அரும்புக்
கணை - மலர் அம்பு 18 - 105
அருவுரு - உயிரும் உடம்பு
மாம் வடிவ உண்மையும்,
இன்மையும் 30 - 84
அருள் கண் - அருள் நோக்கம் 22 - 15
அலகின் மூதூர் 2 - 34
அலங்கல்-மாலை: அசைதலை
யடையது என்னும்
பொருளது 4 - 63
அலத்தகம் - செம்பஞ்சுக்
குழம்பு 6 - 110
அலத்தற்காலை - வறுமைக்
காலம்; துன்பமுடைய
காலம் என்பதுபொருள் 15-50
அலர் - பழிச்சொல் 22 - 87
அலர் உறுத்தல் - பலரறியச்
செய்தல் 20 - 100
அலவலைச் செய்தி - ஆராயாமல்
செய்த செயல் 17 - 51
அலசுதல் - வருந்துதல் 9 - 7
அல்லல் - துன்பம் 13 - 89
அல்லவை-அறமல்லாதவை 22 - 173
அல்லி - அகவிதழ்; மலரின்
உள்ளிதழ் 21 - 28
அவதி - எல்லை 21 - 188
அவத்திறம் தீயவிருப்புத்
தன்மை 7 - 14
அவலப்படிற்றுரை 6 - 163
அவலம் - துன்பம் 21 - 94
அவலம் - வருத்தம் 4 - 118
அவிநயம் - பாட்டின் பொருள்
தோன்றக் கை முதலிய
உறுப்புக்களால் குறிப்புக்
காட்டி ஆடுங்கூத்து 19 - 79
அவிர் ஒளி - விளங்குகின்ற
ஒளி 12 - 84
அவிழ்தல் - விரிதல்; மலர்தல் 18-59
அவ்வியம் - பொறாமை 5 - 22
அவ்வையர் - தாய்மார் 11 - 137
அழற்கண் நாகம் - திட்டி
விடம்என்னும்பாம்பு 23 - 69
அழிகுலம் - இழி குலம்:
கீழ்ப்பிறப்பு 13 - 68
அழிதகவுள்ளம் - அழிந்த
உள்ளம் 12 - 43
அழியல் - துன்பம் 27 - 156
அழிவு - வருத்தம் 2 - 11
அழுங்கல் - வாய்விட்டழுதல் 4 - 181