பக்கம் எண் :

பக்கம் எண் :596

Manimegalai-Book Content
அருஞ்சொல் பொருள் அகரவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
அகநகர்-உள்நகரம்(நகரில்) 1-72
அகம்மலி உவகை - உள்ளத்தில்
நிறைந்த மகிழ்ச்சி 15-72
அகம் - மனம் 23 - 141
அகலம்-மார்பு 8 - 42
அகல் இருவானம் - அகன்ற
பெரியவிண்ணுலகம் 19 - 91
அகல்வாய்-விரிந்த இடம் 19-17
அகவயின் - உள்ளிடம் 2 - 13
அகவை - உள்ளிடம் 12 - 66
அகவை - அடங்கியது 15 14
அகன் சுரை-உள்ளிடம் 16-133
அங்கி - நெருப்பு 27-209
அங்கி மனையாள் - அக்கினி
தேவன் மனைவி 18 - 95
அசரீரி - சரீரம் இல்லாதது;
உடலுருவற்றது; அருவ
மாய் எங்கும் நிறைந்துள்ள
கடவுள் 16 - 44
அசும்பு - சேறு 8 - 6
அஞர் - துன்பம் 23 - 8
அஞ்சல் - அஞ்சாதே 7 - 18
அஞ்சனம் - மை 18 - 161
அஞ்சில் ஓதி - அழகிய சில
வாகிய கூந்தல்; ஐவகை
யாக முடிக்கப்படும் சில
வாகிய கூந்தல் 8 - 12
அடங்கலும்-முழுவதும் 16-134
அடர் - தகடு 15 - 14
அடர்க்குறு-பகையாயினாரை
நெருக்கி வருத்துதலைச்
செய்யும் 12 - 40
அடல்-கொல்லுதல்: வெல்லுதல் 17 - 10
அடிதொடுதல் - திருவடிகளைத்
தொட்டுச் சூளுறுதல் 18 - 171
அடித் தொழில் - குற்றேவல் 22 - 134
அடிபிழைத்தல் - திருவடிக்குப்
பிழைசெய்தல் 19 - 42
அட்டிற்சாலை - மடைப்பள்ளி 20 - 7
அணங்கு - தீண்டிவருத்தும்
தெய்வப்பெண் 6 - 135
அணங்குடையளக்கர் 17 - 12
அணிமலர்ப் பூங்கொம்பு 15 - 72
அணுகல் - நெருங்காதே
(எதிர்மறைச்சொல்) 20-112
அண்டல் - நெருங்குதல் 27 - 70
அதிர்கழல் - ஒலிக்கின்ற
வீரக்கழல் 19 - 42
அத்தம் - அரிய வழி 13 - 39
அநித்தம் - நித்தமல்லாதது:
நிலையற்றது 25 - 3
அந்தணாளன் - மறையவன் 22-115
அந்தம்-ஒழிவு:முடிபு 27 - 225
அந்தர சாரிகள் - வானின்
வழியாகச்சொல்வோர் 28-69
அந்தரம் - வானம் 20 - 108
அந்தரி - துர்க்கை 20 - 116
அந்தி - மாலைப்பொழுது 5 - 140
அந்தில் - அவ்விடம் 13 - 107
அமயம் - பொழுது 10 - 27
அமரர் கணம் - உம்பர் கூட்டம்;
தேவர்குழு 15 - 19
அமர் அகம்-போர்க்களம் 5-137
அமர்நகை - பொருந்திய
சிரிப்பு: விருப்பத்துடன்
சார்ந்த சிரிப்பு 13 - 92
அமலை - திரளை; சோற்று
உருண்டை 17 - 2
அமளி - படுக்கை 7 - 6
அமுதசுரபி - அமுதத்தைக்
கொடுப்பது 11 - 44