ஆழித்தாழி
- சக்கரவாளமா
கிய வட்ட வடிவமுள்ள
இடம் 6 - 173
ஆழியங்குன்றம் - சக்கர
வாளமலை 6 - 192
ஆறு - வழி 26 - 1
ஆறு அறி மரபு - செய்யும்
வழியறிந்த முறைமை 1 - 57
ஆற்றாப் பாலகர் 7 - 81
ஆற்றாமாக்கள்-வறியவர் 17 - 64
ஆற்றுதல்-கொடுத்தல் 17 - 64
ஆற்றுதல்-உதவுதல் 14 - 8
ஆற்றுநர் - பொறுக்கும் வன்
மையுடையோர் 11 - 92
ஆற்றுப்படுத்தல் - போக்குதல்;
வழிச்செலவிடுதல் 5-139
ஆனைத்தீ - தணியாத பெரும்
பசியைச் செய்வதோர்
நோய் (பதிகம்) 66
ஆன்ற அமைந்த; பொருந்திய 15 - 10
இகல் - மாறுபாடு: பகை 19 - 119
இசைச்சொல் - புகழ் 11 - 81
இசையுந-ஒத்திருப்பன 3 - 157
இஞ்சி - மதில் 5 - 112
இடங்கர் - முதலை 28 - 18
இடங்கழி காமம் -வரம்பு
கடந்த காமம் 10 - 22
இடபம் - இடபராசி 15 - 23
இடபம் - வைகாசி 11 - 40
இடமுறை மும்முறை 9 - 5
இடர் - துன்பம் 14 - 20
இடர்வினை - தீவினை 21 - 21
இடவயின் - இடத்தில் 15 - 4
இடுக்கண் - துன்பம் 14 - 26
இடுமணல் - எக்கரடித்த
மணல் 17 - 26
இடும்பை - துன்பமொழி 3 - 6
இடையிருள் யாமம் 6 -208
இணர் - பூங்கொத்து 7 - 100
இணை - இரண்டு 23 - 45
இதை - மரக்கலப்பாய் 14 -81
இந்திர கோடணை - இந்திர
விழா 5 - 94
|
இந்திர
திருவன் - இந்திரன்
போன்ற செல்வத்தையுடைய
மன்னன் 19 - 116
இந்திர மருமான் - இந்திரன்
வழித்தோன்றல் 24 -164
இந்திர விகாரம் - இந்திரனால்
ஆக்கப்பட்ட ஏழ்
அரங்குகள் 26 - 55
இப்பி-சிப்பி: கிளிஞ்சில் 27 - 64
இமிர்தல் - ஒலித்தல் 3 - 49
இமிழ் - முழக்கம் 17 - 50
இம்பர் - இவ்வுலகம் 26 - 38
இம்மை - இப்பிறப்பு 3 - 96
இயக்கம் - செல்லுதல் 25 - 8
இயவு - வழி: பாதை 13 - 8
இயல்பு - இயல்பென்னும்
அளவை 27 - 47
இரங்கல் - இரங்காதே வருந்தாதே
(முன்னிலை) 6 - 161
இரத்தல்-யாசித்தல்: தாழ்ந்து
ஒன்றை வேண்டுதல் 3 - 103
இரத்தி - இலந்தை 6 . 89
இரிய - கெட: நீங்க 21 - 165
இரியல் மாக்கள் - கெடுதலுற்ற
மக்கள்; விரைந்தேகுவோர் 13 : 82
இருக்கை - இருப்பிடம் 4 - 115
இருக்கை - கட்டில் 16 - 67
இருங்கடல்-பெரிய கடல் 8 - 1
இருங்கோ வேட்கள் - குயவர் 28 - 34
இருசுடர் - ஞாயிறு திங்கள்
ஆகிய இரண்டு ஒளிப்பொருள்கள் 27 - 89
இருடி - முனிவன்: (''ரிஷி''
என்னும் வடசொல்
திரிபு) 13 - 66
இருத்தி - சித்தி 26 - 61
இருள் மயக்கம் - இருட்கலப்பு 14 - 3
இலஞ்சி - பொய்கை: தடாகம் 28 -202
இலவந்திகை - இயந்திரவாவி 3 - 45
இலவு - இலவம்பூ 20 - 51 |