இலி
- இல்லாதவன் 16 - 10
இழிதல் - கீழிறங்குதல் 14 - 83
இழுக்கி - வழுக்கிவீழ்ந்து 21 - 55
இழும் என் சும்மை இழும்
என்னும் ஒலி: (இழும்
என்பது ஒலிக்குறிப்பு) 14-27
இளங்கதிர் ஞாயிறு: (பதிகம்) 1
இளங்கால் செல்வன்-இளந்தென்றற்காற்று 19-101
இளவள ஞாயிறு 10 - 11
இளி - இசை 19 - 26
இளிவு - அருவருப்பு 6 - 68
இறவு - இறால் என்னும்
ஒருவகை மீன் 20 - 46
இறுதி - முடிவு 3 - 96
இறுத்தல் - தங்குதல் 5-141
இறுத்தோர்-கொடுத்தோர் 6-50
இறும்பு - குறுங்காடு 19 - 97
இறும்பூது - வியப்பு; ஆச்சரியம் 20 - 55
இறுவரை - பெரியமலை 26 - 30
இறை - சிறிது 18 - 69
இறை - இறப்பு: வீட்டின்
தாழ்வாரம் 7 - 60
இறை கொள்ளுதல் - தங்குதல் 4 - 69
இற்று - இத்தன்மையுடையது 30 - 48
இனைதல் - வருந்தல் 3-158
இன்சீர் - இனிய தாள
வொற்று 19 - 26
இன்பம் - முத்தியின்பம் 3 - 96
இன்மை-ஒரு பொருளின்
இல்லாமை 27 - 51
இன்னணம் - இவ்வாறு 8 - 1
இன்னாப்பிறவிஇகந்தோர் 12-100
ஈண்டுதல்-திரளுதல்: ஒன்று
சேர்தல் 14 - 25
ஈண்டுநீர்-கடல்; மிக்க நீரை
யுனையதென்பது பொருள் 14 - 28
ஈமம் - பிணஞ்சுட அடுக்கிய
விறகடுக்கு 16 - 23
ஈர்த்தல் - இழுத்தல் 7 - 55
ஈறுகடை - முடிபின் இறுதி 21 - 144
|
ஈனோர்
- இவ்வுலகத்தில்
உள்ளோர் 28 - 132
உகிர் - நகம் 20 - 59
உகுத்தல் - சொரிதல் 9 - 4
உச்சி மீமிசை-மேலிடம் 11 - 22
உஞ்சை-உச்சயினிநகரம் 15-64
உடங்கு-யாவும்: எல்லாம் 10 - 64
உடம்புவிட்டோடும்உயிர் 16-92
உணங்கல் - வற்றல் 20 - 46
உணர்ந்ததை உணர்தல் -
மறித்துணர்வு 27-60
உதைத்தல் - உந்துதல்: தள்ளிக்கொண்டு
செல்லல் 16-14
உதைத்தல் - தெறித்தல் 7 - 48
உபத்தம் - பெண் ஆண்
உறுப்பு 27 - 237
உமிழ்சீ - வெறுக்கத்தக்க
சீ (சலம்) 20 - 48
உம்பர் - மேலிடம் 26 - 38
உம்பளம் - உப்பளம்:
(மெலித்தல் விகாரம்) 24-27
உம்மைவினை-பழவினை 26-32
உயக்கம் - வருத்தம் 7-66
உயங்கு நோய் - மிக்க துன்பம் 3 - 2
உயவல் - வருந்துதல் 3 - 90
உயா - வினவல் 20 - 93
உயிர் ஈறு செய்தோர் - உயிரை
விட்டு விட்டோர் 22-23
உயிர்த்தல் - பெரு மூச்சவிடுதல் 19 - 28
உயிர்த்து - மோந்து 27-18
உயிர்ப்பதிப் பெயர்ப்பு -
உயிரைவிடுதல்: இறத்தல்;
உடலினின்று உயிரை நீக்குதல் 14 - 95
உயிர்மருந்து - சோறு 25 - 160
உய்தி - உய்வாய்: மேம்படுவாய்
(முன்னிலையொருமை) 21 - 179
உய்ப்ப-செலுத்த; கொண்டு
செல்ல 16 - 38
உய்யா நோய் - உயிர் உய்ய
வொண்ணாத நோய் 23 - 59
உய்யானம் - அரசர் விளை
யாடுஞ்சோலை 3 - 52 |