பக்கம் எண் :

பக்கம் எண் :601

Manimegalai-Book Content
அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
உரகர் - நாகர் 11 - 70
உரவுநீர் - கடல் 7 - 125
உரவோன் - அறிஞன் 4 - 108
உரவோன் - அறிவுடையோன் 2 - 69
உருகெழு-அச்சம் பொருந்திய 4 - 39
உருப்ப - அழல; வருத்த;
முதிர 15 - 83
உருப்பு - வெப்பம் 17 - 56
உருவிலாளன் - வடிவமற்றவன்:
மன்மதன் 5 - 6
உருவு - வடிவம் 7 - 27
உரைசால் தெய்வதம் (பதிகம்) 45
உ,ரைமுடிவு காட்டிய உரவோன் 4 - 108
உரைமூதாளன் - அறிவு
மேம்பட்ட உரையாளன் 12-4
உலகவிருத்தம் - உலக இயல்புக்கு
மாறுபாடாக உரைப்பது 29 - 162
உலப்பு - கெடுதல் 6 - 111
உலாநீர்ப் பெருங்கடல் 12 - 67
உவகை - மகிழ்ச்சி 12 - 82
உவப்பு - மகிழ்வு 15 - 19
உவவனம் - உவவனம் என்னும்
பூம்பொழில் (பதிகம்) 45
உவாமதி - முழுமதி: கலை
நிறைந்த சந்திரன் 22 - 13
உழந்த - வருந்திய 3 - 5
உழிஞ்சில் - வாகை; உன்னம் 6 - 80
உழையோர்-உரிமை மகளிர்:
பக்கத்திலிருப்போர் என்பது
பொருள் 3 - 46
உளமலி யுவகை 12-82
உளைத்தல் - ஊளையிடல்:
நரியின் கூக்குரல் 6 - 111
உள்வரி-வேற்றுரு; பொய்வேடம் 19 - 29
உறைபதி - வாழ்விடம்;
தங்கியிருக்குமிடம் 12 - 94
உறையுள் - இருக்குமிடம் 19-29
ஊக்குதல் - ஆட்டுதல் 19 - 74
ஊங்கண் - முன்பு 21 - 181
ஊசல் - ஊஞ்சல் 19 - 73
ஊடு சென்று ஏறல் - நடு
விடத்தில் மேலேறிச்
செல்லுதல் 20 - 21
ஊட்டினை - உண்ணுமாறு
செய்தாய் 23 - 92
ஊட்டும் - உண்பிக்கும் 19 - 70
ஊணொலி யரவம் 17 - 97
ஊண் - உண்ணல் 6 - 117
ஊரா நற்றேர் - தானே
செல்லும் வான ஊர்தி 6 - 39
ஊருநீர் - பரந்தநீர் 18 - 92
ஊர் காப்பாளர் - ஊரைக்
காத்துத்திரியும் வினையாளர் 7 - 69
ஊர்க் குறுமாக்கள் - ஊரிலுள்ள
இளஞ்சிறுவர் 15 - 59
ஊர்திரை-ஊர்கின்ற அலை;
செல்கின்ற அலை 16 - 14
ஊழ் - முறைமை; நியதி 5 - 16
ஊழ்தரு தவத்தள் 5 - 16
ஊழ்படுதல் - முறையே
வளர்ந்து முதிர்ந்து கெடுதல் 30-37
ஊறு - பொறி புலன்களின்
இயைபு 24 - 106
ஊன் - தசை: உட்பொதிந்துள்ள
சதை 20 - 54
ஊண் - உடல் 12 - 90
ஊன்பிணி - தசையின்கட்டு 25 - 216
எஃகு - வேல் 19 - 26
எஞ்சா மண் - குறையாத
நிலம் 19 119
எஞ்சுதல் - குறைதல்:
தோற்றுப்போதல் 3 - 157
எடுப்ப - ஏற்ற 5 - 134
எட்டி-வணிகர் பெறும் பட்டப்பெயர் 4 - 58
எட்டிப்பூ - எட்டி என்னும்
பட்டமும் அதற்குரிய
பொற்பூவும்: வணிகர்
பெறும் பட்டம் 22 - 113
எண்கு - கரடி 16 - 68