பக்கம் எண் :42 |
|
Manimegalai-Book Content
3.
மலர்வனம் புக்க காதை
|
அசைத்து விலக்குதல்; சீல்மில்லாரைக் காணின் அவருடன் பேசாது அவரைப் போம்படி
கையசைத்துக் குறிப்பித்தல் சைன முனிவர்க்கு இயல்பு. உண்ணா நோன்பி - இரண்டுவாவும்
அட்டமியும் பட்டினி விட்டுண்ணும் விரதி;
1"பட்டினி
நோன்பிகள்'' என்பதனுரையும், 2"
ஓவா திரண்டுவவு மட்டமியும் பட்டினிவிட்டொழுக்கங் காத்தல், தாவாத்தவமென்றார்"
என்பதும் காண்க. கரண்டையனும் பிரம்பின்னும் ஆகிய ஆராந்தாணத்துள்ளோன் நோன்போடு
மேனியனாய் நீத்து
ஏங்கி வருபவனை என்றியைத்துலுமாம். தருவதும் உரைத்ததுமாகிய தேறலில் கொலையுமுண்டோ
எனக் கூட்டுக. தரூஉம் தலைமகன் எனலுமாம். கொள்ளும், உண்ணும் என்னும் ஏவல்
முற்றுக்களில்
ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெட்டது. பெருங் கதையிற் களிமகன் இயல்பாகக்
கூறப்பட்டுள்ள, 3"துறக்கம்
கூடினுந் துறந்திவ ணீங்கும், பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி, ஆர்த்த யாய
னூர்க்களி மூர்க்கன், செவ்வழிக் கீதஞ் சிதையப் பாடி, அவ்வழி வருமோ ரந்தணாளனைச்,
செல்ல லாணை நில்லிவ ணீயென, எய்தச் சென்று வைதவண் விலக்கி, வழுத்தினே
முண்ணுமிவ் வடிநறுந் தேறலைப், பழித்துக் கூறு நின் பார்ப்பனக் கணமது, சொல்லா
யாயிற் புல்லுவென் யானெனக், கையலைத் தோடுமோர் களிமகற் காண்மின்" எனபது
ஈண்டு அறியற்பாலது.
|
104-115. |
கணவிரி மாலை கட்டிய
திரணையன்-அலரிப்பூவால் திரணையாகக் கட்டப்பட்ட மாலையை யுடையனாய், குவிமுகிழ்
எருக்கில் கோத்த மாலையன்-எருக்கினது குவிந்த முகைகளாற் கோக்கப் பெற்ற
தாரினை யுடையனாய், சிதவல் துணியொடு சேண்ஓங்கு நெடுஞ்சினைத் ததர்வீழ்பு ஒடித்துக்
கட்டிய உடையினன்-சிதரின துணியோடு வானிலே உயரந்த பெரிய மரக் கிளைகளிலுள்ள
செறிந்த சுள்ளிகளை ஒடித்துக் கட்டிய உடையை யுடையனாய், வெண்பலி சாந்தம் மெய்முழுது
உறீஇ-வெண்ணீறுஞ் சந்தனமும் உடல் முழுதும் பூசிக் கொண்டு, பண்பில் கிளவி பலரொடும்
உரைத்தாங்கு - பயனில்லாத சொற்களைப் பலரொடுங் கூறிக் கொண்டு, அமூஉம் விழூஉம்
அரற்றும் கூஉம்-அழுதும் விழந்தும் அரற்றியும் கூவியும், தொழூஉம் எழூஉம் சுழலலும்
சுழலும் - தொழுதும் எழுந்தும் சுழலுதலைச் செய்தும்,. ஓடலும் ஓடும் - ஓடியும், ஒருசிறை
ஒதுங்கி நீடலும் நீடும்-ஒரு பக்கமாக ஒதுங்கி நெடிது நின்றும், நிழலொடு மறலும்-நிழலுடன்
பகைமை கொண்டும் நிற்கின்ற, மையலுற்ற மகன்பின் வருந்திக் கையறு துன்பம்
கண்டு நிற்குநரும்- பித்துற்றவனது செயலற்ற துன்பத்தினைக் கண்டு வருந்தி அவன்
பின்னே நிற்போரும்; |
1
சிலப். 15: 164.
2
சீவக. 1547.
3
பெருங். 1. 40: 88-98.
|
| |
|
|