பக்கம் எண் :

1

ம கா பா ர த ம்.

     பாரதம் என்னுஞ் சொல்லுக்கு - பரதனது வமிசத்தைப்பற்றிய
நூலென்றுபொருள்.இங்குக் குறித்த பரதனென்பவன் சந்திர வமிசத்தில் துஷ்யந்த
மகாராசனுக்குச்சகுந்தலையினிடந் தோன்றிப் பிரசித்திபெற்ற ஓரரசன்.
பரதவமிசத்துத்தோன்றினவர்,பாரதர்; (அவராவார் - பாண்டவரும்,
துரியோதனாதியரும்:) அவர்களது சரித்திரத்தைஉணர்த்தும் நூல் பாரத
மெனப்பட்டது. இது - வடமொழித்தத்திதாந்தநாமம். (ஒருவடசொல் சிறிது மாறித்
தன்னோடு இயைபுடைய பொருளையேனும்தன்பொருளையேனும் உணர்த்துவது,
தத்திதாந்த நாமம்.) இனி, வருணாச்சிரமதருமம்இராசதருமம் மோட்சதருமம் நீதி
முதலிய சிறந்த உறுதிப்பொருள்களையெல்லாம்அறிவிப்பதனால் முனிவர்கள்
சீர்தூக்கிப் பார்க்குமிடத்து மற்றையெல்லா நூல்களினும்மிகுந்த பாரம் (அதாவது
மகிமை) உடைமைபற்றி, இந்நூலுக்குப் பாரதமென்னும் பெயர்இடப்பட்டதென்றுங்
கொள்ளலாம். இருக்கு முதலிய நான்கு வேதங்களோடு ஒப்பஐந்தாம்வேத
மென்று சிறப்பித்துக் கூறப்படுவதும், மிகச்சிறந்த பகவத்கீதையைத்தன்னுள்
பீஷ்ம பர்வத்திலும் விஷ்ணுஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை ஆநுசாஸநிக
பர்வத்திலும் அடக்கிக்கொண்டிருப்பதும் இந்நூலுக்கு எல்லா நூல்களினுஞ் சிறந்த
மேம்பாடாம். இது பற்றியே, இது மகாபாரதம் எனப்படும். இந்நூலை முதலில்
வடமொழியிற் செய்தவரான வியாசமகாமுனிவரால் வைக்கப்பட்ட 'மகாபாரதம்'
என்கிறமுதனூலின் பெயரே வழிநூலாகிய இத்தமிழ்நூலுக்கும் பெயராயிற்று.
பாரதத்துக்கு 'ஜயம்' என்றும் ஒரு பெயருண்டு.

     இது, இதிகாசம் இரண்டனுள் ஒன்று: (மற்றொன்று - இராமாயணம் என்ப.)
உபதேச பரம்பரையில் வந்த பழைய சரித்திர மொன்றைப் பிரதானமாக எடுத்துப்
பலகிளைக்கதைகளோடு புணர்த்து விரித்துக் கூறும் நூல் - இதிகாசமென்றும்,
உலகத்தின்தோற்றம் ஒடுக்கம் முனிவர்கள் அரசர்கள்மரபு அவர்கள்
சரித்திரங்கள் மநுவந்தரம்என்னும் ஐந்து விஷயங்களை விரவிக்கூறும்
நூல் புராணமென்றும் வேறுபாடுஉணரத்தக்கது. புராணம் - பிராம்மம் முதலாகப்
பதினெட்டு வகைப்படும். வேதத்தின்கருத்து இன்னதென்று நியாயப்
பிரமாணங்களால் தேற்றி விளக்குதல்பற்றி, இந்தஇதிகாசபுராணங்கள், வேதத்திற்கு
உபப்பிரஹ்மணங்களென்று சொல்லப்படும்:உபப்பிரஹ்மணமென்றால்
வளர்ப்பதென்று பொருள்.

தற்சிறப்புப்பாயிரம்

     இத்தொடர் - தனக்குச் சிறத்தலையுடைய பாயிரமென்று விரியும்.
பொதுவாகவன்றிக் கவி தாம் தொடங்கும் நூற்கே உரியதாகுமாறு சிறப்பாக
அமைந்தபாயிரமென்பது, கருத்து. பாயிரம் - பாஹ்யம் என்ற வடசொல்லின்
திரிபு:வெளிப்பட்டது என்பது, அவயவப்பொருள்: நூற்குப் புறம்பாக
அமைந்திருக்கும் நூன்முகம், பாயிரமெனப்படும்: "முகவுரை பதிகம் அணிந்துரை
நூன்முகம், புறவுரை